அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை : டி.வியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியை 60 மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டுள்ளனர்.!
ராமர் கோவில் பூமி பூஜை விழாவை உலகம் முழுவதும் 160 மில்லியனுக்கும் அதிகமானோர் டி.வியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி மூலம் கண்டுகளித்ததாக பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.இதைத்தொடர்ந்து இன்று கட்டுமான பணி தொடங்குகிறது. சிவில் கட்டுமான பணிகள், எல் அண்ட் டி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்றரை ஆண்டுகளில் கோவில் பணி முற்றிலும் முடிவடையும். 2024-ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பாக கோவில் திறந்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரசார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி வெம்பதி டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: கடந்த 5 -ம் தேதி உ.பி., மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா கொண்டாடப்பட்டது. இந்தவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பூமி பூஜை விழாவை தூர்தர்ஷன் நேரலையாக ஒளிபரப்பியது.
Per preliminary estimates over 160 Million people watched the live telecast of the Ayodhya Ram Temple Bhumi Pujan ceremony, resulting in viewership of more than 7 billion viewing minutes across the TV universe in India.
— Shashi S Vempati (@shashidigital) August 7, 2020
5-ம் தேதி புதன்கிழமை காலை 10.45 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியை 200க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் தூர்தர்ஷனிடமிருந்து பெற்று நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது. இதன் மூலம் 160 மில்லியனுக்கும் மேலான மக்கள், 7 பில்லியன் மணித்துளிகள் நேரம் பார்த்துள்ளனர். இவ்வாறு பதிவிட்டு உள்ளார்.
Leave your comments here...