74-வது சுதந்திரதின கொண்டாட்டங்களில் ராணுவம், கப்பல்படை, இந்திய விமானப்படை ஆகியவற்றின் இசைக்குழுக்கள் பங்கேற்பு..!
சுதந்திரதின கொண்டாட்டத்தை முன்னிட்டு, 2020 ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு, ராணுவ இசைக்குழுக்கள், முதல் முறையாக நாடு முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளன.
தமது வாழ்க்கையைப் பணயம் வைத்து கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து போரிட்டு வரும், நாடு முழுவதும் உள்ள கொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவிக்கவும், பாராட்டுகளை அளிக்கவும், இந்த இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
போர்பந்தர், பெங்களூரு, ராய்ப்பூர், அமிர்தசரஸ், கவுஹாத்தி, அலகாபாத், கொல்கத்தா ஆகிய இடங்களில், ராணுவ, கப்பல் மற்றும் காவல்துறை இசைக்குழுக்கள் இதுவரை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளன. விசாகப்பட்டினம். நாக்பூர், குவாலியர் ஆகிய நகரங்களில் இன்று பிற்பகல் ராணுவ மற்றும் காவல்துறை இசைக்குழுக்களின் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இம்மாதம் ஏழாம் தேதியன்று ஸ்ரீநகரிலும், கொல்கத்தாவிலும் ராணுவ பாண்டுக்குழு இசைக்க உள்ளது.
ராணுவ மற்றும் காவல்துறை இசைக்குழுக்கள், இம்மாதம் ஒன்பதாம் தேதியன்று சென்னையிலும், ஆகஸ்ட் 13-ம் தேதியன்று மதுரையிலும் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளன.
Leave your comments here...