‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ உலகின் மிக மூத்த மொழி தமிழ்-ஐ.நா-வில் தமிழில் முழங்கிய பிரதமர் மோடி.!

அரசியல்

‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ உலகின் மிக மூத்த மொழி தமிழ்-ஐ.நா-வில் தமிழில் முழங்கிய பிரதமர் மோடி.!

‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ உலகின் மிக மூத்த மொழி தமிழ்-ஐ.நா-வில் தமிழில் முழங்கிய பிரதமர் மோடி.!

ஐநா. பொதுச்சபையின் 74ஆண்டு நேற்று நடந்த, ஐ.நா., பொதுக் கூட்டத்தில், பிரதமர் மோடி, ஹிந்தி மொழியில் பேசினார். என் மீதும், என் அரசு மீதும், 130 கோடிமக்கள் நம்பிக்கை வைத்து, இரண்டாவது முறையாக, எங்களை வெற்றி பெறச் செய்தனர். அவர்கள் சார்பாக, உங்களிடம் பேச, என்னை அனுப்பியுள்ளனர். என் மக்கள் சார்பாக, ஐ.நா., சபையில் பேசுவதை, மிகவும் பெருமையாககருதுகிறேன். மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த ஆண்டை, உலகம் கொண்டாடிவருகிறது. அவரது அஹிம்சை கொள்கை, இன்றும் நமக்கு பொருத்தமாக உள்ளது.அமைதி, வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றுக்கு, காந்தியின் அஹிம்சை கொள்கை தான் வழிகாட்டுகின்றன.

Picture for : PM #Narendramodi addressing #UNGA #NewYorkCity

இந்தியா உலகிற்கு யுத்தத்தை தரவில்லை, அமைதியை உலகிற்கு உரைத்த பௌத்தத்தையே தந்தது என்று கூறிய மோடி தீவிரவாதத்தினால் உலக அமைதி படுகாயம் அடைந்து கிடப்பதாக தெரிவித்தார். உலகமே ஓரணியில் திரண்டு தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

நாட்டின் வளர்ச்சியே தமது அரசின் கனவு என்ற மோடி, இந்தியாவின் வளர்ச்சி உலக நாடுகளுக்கு நன்மை தரும் என்றார். 3000 ஆண்டுகளுக்கு முன்பே உலக மக்கள் அனைவரையும் உறவினர்களாக பார்த்த நாடு இந்தியா என்று அவர் தெரிவித்தார். உலகின் மிக மூத்த மொழி தமிழ் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடல் வரிகளை மேற்கோள் காட்டினார்.உலக வெப்பமயமாதலை தடுக்க இந்தியா உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் கூறினார். புதுப்பிக்க வல்ல எரிசக்தி துறையை இந்திய அரசு ஊக்குப்படுத்தி வருவதாக கூறிய அவர், வரும் ஆண்டுகளில் 450 ஜிகா வாட் அளவுக்கு புதுப்பிக்க வல்ல எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றார்.

தூய்மை இந்திய திட்டத்தின் கீழ் 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 50 கோடி பேருக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக கூறிய மோடி, 370 மில்லியன் பேருக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

Comments are closed.