சென்னை விமான நிலையத்தில் 1.48 கிலோ தங்கம் பறிமுதல் : இருவர் கைது
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் ரூ.82.3 லட்சம் மதிப்புள்ள 1.48 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். செவ்வாய்கிழமையன்று காலை, துபாயிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம், சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த கலீல் அகமது என்பவரிடமிருந்து ஒரு பாக்கெட் தங்கப்பசை, சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.15.60 லட்சம் மதிப்புள்ள இந்தத் தங்கத்தின் எடை 280 கிராம் ஆகும்.
Chennai Int'l Airport: In 2 cases on 4.8.20 and 3.8.20 night total 1.48 kg gold valued @ Rs 82.3 lakhs seized under Customs Act from pax who arrived by flts AI-1984 & IX-1644 from Sharjah & Dubai resp. Two receivers were arrested from outside airport.Further investigation on. pic.twitter.com/8AREi2sdEU
— Chennai Customs (@ChennaiCustoms) August 4, 2020
முன்னதாக, திங்கட்கிழமையன்று விமான நிலைய புலனாய்வு அதிகாரிகள், சென்னை விமான நிலையத்திற்கு வெளியே, காஜா மொய்தீன், எஸ் பீர் மொய்தீன் ஆகிய இருவரிடமிருந்து ஐந்து பாக்கெட் தங்கப் பசையை, சோதனையின்போது பறிமுதல் செய்தனர். இந்தப் பாக்கெட்டுகளை, ஷார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வந்த ஐந்து பயணிகள் தம்மிடம் கொடுத்ததாக, விசாரணையின்போது அவர்கள் தெரிவித்தனர்.
இது ரூ.66.73 லட்சம் மதிப்புள்ள 1.2 கிலோ தங்கமாகும். இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Leave your comments here...