யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: இந்திய அளவில் தமிழக மாணவர்.!

இந்தியா

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: இந்திய அளவில் தமிழக மாணவர்.!

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: இந்திய அளவில் தமிழக மாணவர்.!

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2019-ம் ஆண்டுக்கான இந்திய குடிமைப் பணிகளுக்கான இறுதித் தேர்வு முடிவு வெளியானது.இதில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் கணேஷ் குமார் பாஸ்கர் அகில இந்திய அளவில் 7-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

கடந்த 2019ம் செப்., மாதம் பல்வேறு பதவிகளை நிரப்புவதற்காக நடந்த இந்த சிவில் சர்வீஸ் தேர்வை 829 பேர் எழுதினர். இதனை தொடர்ந்து நேர்முக தேர்வு, தனிநபர் தேர்வு ஆகியவை கடந்த பிப்., ஆகஸ்ட் மாதம் நடந்தது. இதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேசிய அளவில் பிரதீப் சிங் முதலிடம் பிடித்துள்ளார். பெண்களில் பிரதீபா வர்மா என்பவர் முதலாவதாக வந்துள்ளார்.

கன்னியாகுமரியை சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் என்பவர் தேசிய அளவில் 7 வது இடம் பிடித்துள்ளார். தமிழகளவில் முதலிடம் பிடித்துள்ளார்.மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய பொருளாதாரத்தின் பின்தங்கியவர்களுக்கான ஒதுக்கீடு அடிப்படையில், 78 பேர் தேர்வு பெற்றுள்ளனர். 11 பேரின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான நபர்களை தேர்வு செய்ய ஆண்டுதோறும் யுபிஎஸ்சி தேர்வு நடத்தும். இந்த ஆண்டிற்கான தேர்வு மே 31 அன்று நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வு, அக்.,4க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave your comments here...