பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் சாய் பிரசாத் மீது இசையமைப்பாளர் இளையராஜா புகார்..!
- July 31, 2020
- jananesan
- : 1112
- இளையராஜா
இசையமைப்பாளர் இளையராஜா வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் தனது பாடல்களைப் பதிவு செய்து வந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் எல்.வி.பிரசாத் இளையராஜாவுக்கு அங்கு இடம் வழங்கினார்.
எல்.வி.பிரசாத்தின் மகன் ரமேஷ் பிரசாத்தும், பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டுடியோ வைத்திருப்பதில் பெருமிதம் கொண்டார். ஆனால் கடந்த ஆண்டு எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத், இளையராஜாவை ஸ்டுடியோவை விட்டு வெளியேற வேண்டும் என்று விரும்பினார். அப்போது, இளையராஜாவுக்கு ஆதரவாக கோலிவுட்டும் திரண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் பலன்கிடைக்கவில்லை. இளையராஜாவும் இனிமேல் பிரசாத் ஸ்டுடியோவில் இருக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்.
தற்போது இளையராஜா கோடம்பாக்கத்தில் எம்.எம்.பிரிவ்யூ தியேட்டரை ரெக்கார்டிங் ஸ்டுடியோவாக மாற்றுவதற்காக வாங்கி அதற்கான வேளைகளில் ஈடுபட்டு வருகிறார். பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் சாய் பிரசாத் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா புகார் தெரிவித்துள்ளார். தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் இருந்த இசை நோட்ஸ்களை சேதப்படுத்தியதாக பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் மீது புகார் தெரிவித்துள்ளார்.
Leave your comments here...