அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்கள் : பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்..!
மும்பை, கோல்கட்டா, நொய்டா நகரங்களில் அமைக்கப்பட்ட அதிநவீன கொரோனா ஆய்வகங்களை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைத்தார். இதன் மூலம் சோதனை திறனை அதிகரிக்கவும், நோயை ஆரம்பத்தில் கண்டுபிடிக்கவும் உதவும். தினமும் 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும். கொரோனா முடிந்த பின்னர் காசநோய், டெங்கு ஆகியவற்றிற்கும் பயன்படுத்தி கொள்ள முடியும்.
இந்த மையங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த பின் பேசிய பிரதமர் மோடி :- சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது. கொரோனா உயிரிழப்பு விகிதமும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் குறைவாக உள்ளது. உயர் பரிசோதனை மையங்கள் மூலம், மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் மாநிலங்கள் தொற்றை எதிர்த்து வலிமையுடன் போராடும் .
Launching high-throughput COVID-19 testing facilities. https://t.co/vYSPLHebcD
— Narendra Modi (@narendramodi) July 27, 2020
டில்லி, மும்பை, , கோல்கட்டா நகரங்கள் பொருளாதார நடவடிக்கைகளுக்கு முக்கியப்புள்ளியாக உள்ளன. கொரோனா தடுப்பு கவச உடை தயாரிப்பில், இந்தியா 2வது இடத்தில் உள்ளது.இந்த ஆய்வகம், கொரோனாவுக்கு மட்டுமல்லாமல் வருங்காலங்களில் ஹெபாடிடீஸ் பி மற்றும் சி, எச்ஐவி, டெங்கு உள்ளிட்ட நோய்களை கண்டறியவும் பரிசோதனை செய்யப்படும். இன்று இந்தியாவில் 11 ஆயிரம் கொரோனா மையங்கள் உள்ளன. 11 லட்சம் தனிமைபடுத்தப்பட்ட படுக்கைகள் உள்ளன. 1,300 ஆய்வகங்களில் தினசரி 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனை செய்யப்படுகிறது என்றார்.
Leave your comments here...