எல்லையில் சீண்டி வரும் சீனா : இந்திய ராணுவத்திடம் 5 ரஃபேல் விமானங்களை ஒப்படைத்தது பிரான்ஸ் – பதிலடி தர லடாக்கில் களமிறங்கும் ரஃபேல் போர் விமானங்கள்

இந்தியாஉலகம்

இந்திய ராணுவத்திடம் மேலும் 5 ரஃபேல் விமானங்களை ஒப்படைத்தது பிரான்ஸ்.

எல்லையில் அவ்வப்போது சீண்டி வரும் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. மேலும், பதட்டம் நிறைந்த லடாக் பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, விரைவில் ரஃபேல் போர் விமானங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

கடந்த மாதம் லடாக் பகுதியில் அத்துமீறிய சீன வீரர்களுடன் நடந்த சண்டையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சீன தரப்பிலும் 43 உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்த சம்பவத்தால், இந்தியா- சீனா இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், எல்லையோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதத்தில், ரஃபேல் போர் விமானங்களை உடனடியாக டெலிவிரி வழங்குமாறு பிரான்ஸ் நாட்டு அரசிடம் இந்தியா கோரிக்கை வைத்தது. இதனை ஏற்று, உடனடியாக ரஃபேல் போர் விமானங்களை இந்தியா அனுப்புவதற்கான நடைமுறைகளை பிரான்ஸ் நாட்டு அரசு எடுத்தது.

இதன் பயனாக, இன்று இந்திய ராணுவத்திடம் 5 ரஃபேல் விமானங்களை ஒப்படைத்தது பிரான்ஸ்.
இந்திய விமானப்படையின் பலத்தைக் கூட்டும் வகையில் 5 புதிய ரஃபேல் போர் விமானங்கள் இன்று பிரான்சில் இருந்து ஹரியானா மாநிலம் அம்பாலாவிலுள்ள இந்திய விமானப்படை தளத்திற்கு புறப்பட்டன. இந்த விமானங்களை உடனடியாக லடாக் பகுதியின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்கு இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது. ரஃபேல் போர் விமானங்கள் இயக்கும் இந்திய விமானப் படை விமானிகள் ஏற்கனவே பயிற்சி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Leave your comments here...