ஈஷா அறக்கட்டளைக்கு ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் அங்கீகாரம்…!
ஐ.நா., சுற்றுச்சூழல் பேரவை, அதன் துணை அமைப்புகளில் பார்வையாளராக பங்கெடுக்கும் தகுதியை, ஈஷா அறக்கட்டளை பெற்றுள்ளது. உலகளவில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய சுற்றுச்சூழல் கொள்கையை உருவாக்கும் பணிகளில், ஈஷா அறக்கட்டளை தனது பங்களிப்பை வழங்க முடியும்.ஈஷா மேற்கொண்டு வரும் சுற்றுச்சூழல் பணிகளின் அடிப்படையில், ஐ.நா., அமைப்பு, இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக, ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சத்குரு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:-
.@UNEP has accredited @ishafoundation to the United Nations Environment Assembly. Now is the time to consciously chart a new ecological destiny for the planet. We look forward to strengthening #UNEP’s hands in every possible way. –Sg
— Sadhguru (@SadhguruJV) July 25, 2020
ஐ.நா சபையின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP),ஈஷா அறக்கட்டளையை ஐ.நாவின் சுற்றுச்சூழல் பேரவையில் பங்கேற்க அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ளது. நம் பூமிக்கு புதிய சுற்றுச்சூழல் விதியினை விழிப்புணர்வாய் படைப்பதற்கான நேரமிது. ஐ.நாவின் சுற்றுச்சூழல் திட்டங்களை பலப்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
நதிகளை மீட்போம்’ இயக்கம் தற்போது 2 களப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. காவேரி நதிக்கு புத்துயிரூட்ட, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ‘காவேரி கூக்குரல்’ திட்டமும், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ‘வஹாரி’ நதியை புத்துயிரூட்டும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Leave your comments here...