இணைய வழி கல்விக்கு புதிய பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும் – உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு நடத்திய கல்வி ஆலோசனைக் கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு..!

இந்தியா

இணைய வழி கல்விக்கு புதிய பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும் – உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு நடத்திய கல்வி ஆலோசனைக் கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு..!

இணைய வழி கல்விக்கு புதிய பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும் – உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு நடத்திய கல்வி ஆலோசனைக் கூட்டத்தில்  கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு..!

இணைய வழி கல்விக்கு புதிய பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு நடத்திய இரண்டாவது கல்வி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் மூலமாக கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களை ஐநா சபைக்கு அழைத்து சென்று கல்வியில் புதுமை என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கச் செய்து அவர்கள் கருத்துகளை ஐ.நாவில் சமர்ப்பிக்கிற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் ,அதற்கான முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பன்னாட்டு கல்வியாளர்களுடன் (18-7-2020) அன்று மாலை 6 மணிக்கு சூம் செயலின் மூலமாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்துஇரண்டாம் கட்ட இணையவழி கல்வியாளர்கள் ஆலோசனைக்கூட்டம் இன்று 25.7.2020 மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் திரு செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார். ஊடகப் பிரிவைச் சார்ந்த திரு ஜான் தன்ராஜ் அவர்கள் இணைப்புரையாற்றினார்.தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர் திருமதி டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார்கள். இதில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் முக்கிய, துணைவேந்தர்கள் கலந்துகொண்டு பல்வேறு கருத்துக்களை முன்மொழிந்தனர். குறிப்பாக, உயர் கல்வித்துறையில் டிஜிட்டல் பிளாட்பார்ம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது,இப்பொழுது 76 சதவீத இணையவழிக் கல்வி அளித்தல் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் அனைத்து உயர்கல்வி தேர்வுகளும் இணைய வழியில் நடத்த திட்டமிட வேண்டும், மருத்துவ துறை மட்டுமல்லாது அனைத்து துறைசார்ந்த செய்முறை பயிற்சிகளும் இணைய வழியில் நடத்த முறையான பயிற்சியை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நடத்த வேண்டும்.

இணைய வழிக் கல்வியில் கூகுள் மீட், சூம் செயலி மட்டுமல்லாது, யூடிப் சேனலையும் பயன்படுத்தி பாடத்தை பதிவு செய்து மாணவர்கள் தேவைப்படும் போதெல்லாம் பார்த்து படித்து பயன்பெற வழிசெய்ய வேண்டும்,அனைத்து தரப்பு மாணவர்களும் எளிய முறையில் பயன்படுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும்,இணையவழியில் பாட அறிவை மட்டும் வளர்க்காமல் மாணவர்களின் புதிய திறன்களை வளர்க்கும் செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்,


மேலும் தெலுங்கானா மாநிலத்தின் கவர்னர் திருமதி டாக்டர்.தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் கலந்துகொண்டு பேசியபோது:- “நாமெல்லாம் கொரானா வைரஸை விரட்ட வைராக்கியத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் நாட்டின் முக்கிய துறைகளான பொருளாதாரம், கல்வி பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து அதை சரிசெய்ய நமது பாரத பிரதமர் பல்வேறு முயற்சிகளையும் திட்டங்களையும் தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இந்த சூழலில் உலக தமிழ் வம்சாவளி அமைப்பு ஒருங்கிணைக்கும் கல்வியில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான உச்சிமாநாடு குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் நாமெல்லாம் “இணையத்தால் இணைவோம்! இதயத்தால் இணைவோம்” என்று இணைந்து இருப்பது சிறப்புக்குரியது.

நான் ஒரு ஆளுநராக மட்டுமல்லாமல் தெலுங்கானா மாநிலத்தின் 14 பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் கல்வி சார்ந்த பல்வேறு முயற்சிகளை இணையவழியில் எடுத்து வருகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


அந்த காலத்தில் வீட்டில் இருந்து மாணவர்கள் சென்று தங்கி படிக்கிறேன் குருகுலக் கல்வி முறை இருந்தது, பின்பு மாணவர்கள் தினமும் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று படித்து வருகிற கல்வி முறை வந்தது, இப்பொழுது அவரவர் வீட்டிலிருந்து இணையவழியில் படிக்கிற கல்வி முறை வந்து விட்டது,எனவே இணையவழியில் கல்வி என்பது இனி வரும் காலங்களில் மிக முக்கிய பங்களிக்க போகிறது. இதற்கு ஏற்றார் போல் தொழிநுட்ப பயிற்சிகளை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அளிக்கவேண்டும். இணையவழி கல்விக்கு தேவையான இணைய இணைப்பை நமது பாரதப் பிரதமர் அவர்கள் 70 சதவீத இணைப்பை வழங்கி இருக்கிறார் இன்னும் 30 சதவீத கிராமங்களுக்கு இணைப்பு சென்று சேரவில்லை என்பதை நாம் அறிவோம் விரைவில் அனைவருக்கும் இணைப்பு கிடைக்க அரசு முயற்சித்து வருகிறது.

இந்தச் சூழலில் வெளிநாடுகளில் பயன்படுத்துவது போல் டிஜிட்டல் நூலகத்தை அதிகம் பயன்படுத்த ஊக்கப்படுத்த வேண்டும்.அதேபோல் விவசாயிகளுக்கு வானொலி தொலைக்காட்சிகளில் கல்வி அளிப்பது போல் கிராமத்தில் இருக்கிற ஏழை எளியவர்களுக்கு வானொலி தொலைக்காட்சிகள் மூலம் கல்வியை சென்றடைய செய்ய வேண்டும்.


இந்திய இளைஞர்கள் புத்திசாலிகள் இணையவழிக் கல்வி மாற்றத்தை விரைவாக கற்றுக்கொள்வார்கள். இணைய வழிக் கல்வியில் மாணவர்கள் ஆர்வம் கொள்ளும் வகையில் பல புதிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இணையவழி கல்விக்கென புதிய டிஜிட்டல் பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். புதிய படிப்புகளை உருவாக்க வேண்டும். கிராமப்புறத்தில் இருக்கிற பெண்கள் ,ஏழை எளிய மாணவர்கள், அதிகம் பயன்பெறும் வகையில் புதிய பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும்.இதன்மூலம் புதிய வேலைவாய்ப்பு கிடைத்து, அவர்களின் பொருளாதாரம் உயர்வதோடு, நாட்டின் பொருளாதாரமும் உயரும். எனவே அனைத்து மாணவர்களையும் பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் கல்வியில் பயிற்சி அளிக்க வேண்டும்” என்று சிறப்பாக உரையாற்றினார்.

இந்த கூடலில், சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் டாக்டர் ஜோதிமுருகன் அவர்களும், சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் பி.வி. விஜயராகவன் அவர்களும், கோவை காருண்யா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர்.பி.மன்னர் ஜவகர் அவர்களும், சென்னை டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பாத்துட்டு நிறுவனத்தின் துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி அவர்களும் கலந்துகொண்டு கருத்துரை ஆற்றினார்கள்.நிறைவாக ஊடகப் பிரிவைச் சார்ந்த திரு ஜான் தன்ராஜ் அவர்கள் நன்றி உரை ஆற்றினார் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் இசைத்து இந்த கல்வி ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடந்தது.

Leave your comments here...