லடாக் எல்லையில் பின்வாங்காமல் டிமிக்கி கொடுக்கும் சீன படைகள் – வர்த்தக ரீதியாக சீனாவுக்கு செக் வைத்த இந்தியா.!
ஜூன் 15 அன்று லடாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பொருளாதார ரீதியாக இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இப்பகுதியில் பதற்றத்தைத் தணிக்க இரு தரப்பினரும் தங்கள் நிரந்தர இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று ஒப்புக்கொண்டனர்.
அதேசமயம் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய-சீன ராணுவ கமாண்டர் அளவிலான 4 கட்ட பேச்சுவார்த்தைகளில் பங்கோங் டெசோ பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீன படைகள், கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வாங்க வேண்டும் எனவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், சீன ராணுவத்தினர் லடாக்கின் சில பகுதிகளிலிருந்து இன்னும் வெளியேறவில்லை என்று தகவல்கள் வந்துள்ளன.
இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பில்: இந்தியாவுக்கு பொருட்கள் ஏற்றுமதி மற்றும் கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோர விரும்பும் அண்டை நாட்டு நிறுவனங்கள் அல்லது தனி நபர்கள் சம்பந்தப்பட்ட துறையில், பெயரை பதிவு செய்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. மேலும் தகுதியான நிறுவனமா என்பதை வர்த்தக அமைச்சகம் முடிவு செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Leave your comments here...