“வாழும் கலை அமைப்பு” சார்பில் 1 கோடி பேர் பங்கேற்கும் கந்த சஷ்டி கவசம் பாராயணம்
‘வாழும் கலை’ அமைப்பு சார்பில் வரும் 26-ம் தேதி ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
வாழும் கலை’ அமைப்பின் அறங்காவலர், மோகனசுந்தரி ஜெகநாதன், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தாமோதரன், சசிரேகா கூறியதாவது: ஒவ்வொரு தமிழ் ஹிந்து குடும்பத்தின் ஒரு பகுதியாக, அன்றாடம் பிரார்த்தனைகளில், பக்தியுடன் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்படுகிறது. உடலின் வெவ்வேறு பகுதிகளை, தியானம் மூலம் உயிர்ப்பிப்பதோடு, பாதிப்பு ஏற்பட்டிருந்தால் குணமடையவும் கந்த சஷ்டி கவசம் உதவி செய்கிறது.
இதன் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளவும், மக்கள் நோய் நொடியில் இருந்து விடுபடவும், இரண்டு கோடி மக்கள் பங்கேற்கும், கந்த சஷ்டி கவச பாராயண நிகழ்ச்சி, வரும், 26ல், சஷ்டி திதியன்று இணையதளம் வாயிலாக நடக்கிறது.’வாழும் கலை’ அமைப்பு நிறுவனர், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தலைமை வகிக்கிறார். சமூக ஊடகங்கள் வழியாக, நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்தியா, சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் தமிழ் மொழி பேசும் மக்கள் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.மேலும், உலகெங்கும் உள்ள மதத் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், தமிழ்ச் சங்கங்கள், முருகர் பக்தி பேரவைகள், காவடிக் குழுக்கள், பாதயாத்திரைக் குழுக்கள், இந்து அமைப்புகள், கிராமப் பூசாரிகள் பேரவை, துறவியர் சங்கம், கோயில்கள், கல்வி நிறுவனங்கள், சிறுதொழில்முனைவோர் சங்கங்கள் இந்த கந்த சஷ்டி கவசம் மகா பாராயணத்தில் பங்கேற்கின்றன.
இது, மிக பிரமாண்ட ஆன்மிக ஒருங்கிணைப்பு பிரார்த்தனையாக நிகழவிருக்கிறது. இதில் இணைய விரும்புவோர், ‘பேஸ்புக் லைவ்’ bit.ly/FBKavacham, ‘யூ டியூப் லைவ்’ bit.ly/YTKavacham ஆகிய முகவரிகளை டைப் செய்து, உள்ளீடு செய்து நுழையலாம். விபரங்களுக்கு, வாழும் கலை அமைப்பு பிரதிநிதிகள், தாஸ், 94433 56249, வெங்கடேஷ் 94433 70608 ஆகியோரின் மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Leave your comments here...