அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சிலின் இந்தியா ஐடியா மாநாடு ; பிரதமர் நரேந்திர மோடி உரையின் முக்கிய அம்சங்கள்.!

இந்தியாஉலகம்

அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சிலின் இந்தியா ஐடியா மாநாடு ; பிரதமர் நரேந்திர மோடி உரையின் முக்கிய அம்சங்கள்.!

அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சிலின் இந்தியா ஐடியா மாநாடு  ;  பிரதமர் நரேந்திர மோடி உரையின் முக்கிய அம்சங்கள்.!

அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சிலின் இந்தியா ஐடியா மாநாடு காணொலி முறையில் நடந்தது. அமெரிக்க-இந்தியா வர்த்தக கவுன்சில் ஏற்பாடு செய்த இரண்டு நாள் மெய்நிகர் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி :-


இந்தியா கருத்துக்கள் உச்சிமாநாட்டில் உரையாற்ற அழைத்த அமெரிக்க-இந்தியா வர்த்தக கவுன்சிலுக்கு நன்றி.
அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சில் இந்த ஆண்டு அதன் 45 ஆண்டு நிறைவு செய்வதற்கு வாழ்த்துகிறேன். கடந்த பல தசாப்தங்களாக, இந்திய மற்றும் அமெரிக்க வர்த்தகத்தை அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சில் நெருக்கமாக்கியுள்ளத. உலகத்துக்கு சிறந்த எதிர்காலம் தேவை என்பதை நாம் அனைவரும் ஒப்பு கொள்கிறோம். மேலும், நாம் அனைவரும் கூட்டாக, எதிர்காலத்திற்கு வடிவம் கொடுக்க வேண்டும். எதிர்காலத்திற்கான நமது அணுகுமுறை மனித குலத்தை மையமாக கொண்டதாக இருக்க வேண்டும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

கடந்த 6 வருடங்களாக சீர்திருத்தங்கள் நிறைந்தததாக எமது பொருளாதாரத்தை மாற்றி உள்ளோம். போட்டிகள் நிறைந்ததாக, வெளிப்படைத்தன்மை கொண்டதாக, டிஜிட்டல்மயமாக, புதிய கண்டுபிடிப்புகள் நிறைந்ததாக மற்றும் கொள்கை நிலைப்புத்தன்மை உடையதாக சந்தையை மாற்ற சீர்திருத்தங்கள் உதவியுள்ளன.வலுவான உள்நாட்டு பொருளாதார திறன்களால், உலகளாவிய பொருளாதார ஆற்றலை அடைய முடியும். இதன் பொருள் உற்பத்திக்கான மேம்பட்ட உள்நாட்டு திறன், நிதி அமைப்பின் ஆரோக்கியத்தை மீட்பது மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் பன்மயமாக்கம்.‘தற்சார்பு இந்தியா’ என்ற தெளிவான அழைப்பின் மூலம் ஒரு வளமான மற்றும் ஆற்றல்மிக்க உலகத்திற்கு இந்தியா தனது பங்களிப்பை அளிக்கிறது. அதற்காக, உங்கள் கூட்டுறவுக்கு நாங்கள் காத்திருக்கிறோம்.


இன்று, இந்தியா மீது உலகளாவிய நம்பிக்கை உள்ளது. ஏனென்றால், வெளிப்படை தன்மை, வாய்ப்புகள் மற்றும் விருப்பங்களின் சரியான கலவையை இந்தியா வழங்குகிறது. இதுகுறித்து விரிவாக கூறுகிறேன். மக்களிடமும், ஆட்சியிலும் இந்தியா வெளிப்படை தன்மையைக் கொண்டாடுகிறது. வாய்ப்புகள் அளிக்கும் இடமாக இந்தியா உருவாகி வருகிறது. சமீபத்தில், ஒரு சுவாரஸ்ய தகவல் இந்தியாவில் வெளியானது. நகரங்களில் இணையதளத்தை பயன்படுத்துபவர்களைவிட, கிராமங்களில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை முதல் முறையாக அதிகரித்துள்ளது என அந்த தகவல் கூறியது.தொழில்நுட்பத்தில் உள்ள வாய்ப்புகளில், 5 ஜி, பிக் டேட்டா அனலிட்டிக்ஸ், குவாண்டம் கம்ப்யூட்டிங், பிளாக்-செயின் மற்றும் இன்டர்நெட் விஷயங்கள் ஆகியவற்றின் முன்னணி தொழில்நுட்பங்களின் வாய்ப்புகளும் அடங்கியுள்ளன.இந்திய – அமெரிக்க இருதரப்பு உறவு கடந்த காலங்களில் பல தருணங்களில் உச்சத்தை எட்டியுள்ளது. இப்போது நமது கூட்டு முயற்சி தொற்று நோய் பரவல் நிலையிலிருந்து உலக நாடுகள் விரைவில் மீண்டெழும் வகையில் அத்தியாவசியம் மிகுந்ததாக இருக்க வேண்டும்.


வேளாண் துறையில், இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சீர்திருத்தங்களை செய்துள்ளது. வேளாண் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள், விவசாய விநியோக சங்கிலி மேலாண்மை, ரெடிமேட் உணவு பொருட்கள், மீன்வளம் மற்றும் இயற்கை விவசாய பொருட்கள் போன்றவற்றில் முதலீ்ட்டு வாய்ப்புகள் உள்ளன. சுகாதாரத்துறையில் முதலீடு செய்ய உங்களை இந்தியா வரவேற்கிறது. இத்துறை, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 22% வேகமாக வளர்கிறது. மருத்துவ தொழில்நுட்பம், தொலைதூர மருத்துவம் மற்றும் நோய் கண்டறிதல் ஆகியவற்றில் எங்கள் நிறுவனங்கள் முன்னேறி வருகின்றன.எரிசக்தி துறையில் முதலீடு செய்ய இந்தியா உங்களை அழைக்கிறது. எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரமாக இந்தியா உருவாகும்போது, அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரிய முதலீட்டு வாய்ப்புகள் இருக்கும். தூய்மையான எரிசக்தி துறையிலும் பெரிய வாய்ப்புகள் உள்ளன.


உள்கட்டமைப்பில் முதலீடு செய்ய இந்தியா அழைக்கிறது. எங்கள் வரலாற்றில் மிகப்பெரிய உள்கட்டமைப்பு உருவாவதை எங்கள் நாடு பார்க்கிறது. எங்கள் நாட்டில் லட்சக்கணக்கானோருக்கு, வீடு கட்டி தரவும், சாலைகள் அமைக்கவும், துறைமுகங்கள் உருவாக்கவும் பங்குதாரராக இருக்க வாருங்கள்.விமான போக்குவரத்து துறை, பெரும் சாத்தியமான வளர்ச்சியின் மற்றொரு பகுதி. அடுத்த 8 ஆண்டுகளில் விமான பயணிகளின் எண்ணிக்கை 2 மடங்குக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஆண்டுகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்களை சேர்க்க தனியார் விமான நிறுவனங்கள் திட்டம்.பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறையில் முதலீடு செய்ய வாருங்கள். பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்வதற்கான அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை 74% உயர்த்தியுள்ளோம். பாதுகாப்பு தளவாட உற்பத்தியை ஊக்குவிக்க இந்தியாவில் இரண்டு பாதுகாப்பு வளாகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.நிதி மற்றும் காப்பீடு துறையில் முதலீடு செய்ய வாருங்கள். இத்துறையில் அன்னிய முதலீடு (FDI) உச்சவரம்பு 49%. காப்பீடு மார்க்கெட்டிங் நிறுவனங்களில், தற்போது 100% அன்னிய முதலீடுக்கு அனுமதி.


இந்தியாவின் எழுச்சி என்பது நீங்கள் நம்பக்கூடிய ஒரு தேசத்துடனான வர்த்தக வாய்ப்புகளின் அதிகரிப்பு, திறந்த வெளிப்பாட்டுடன் உலகளாவிய ஒருங்கிணைப்பின் அதிகரிப்பு, உயர்வை அளிக்கும் சந்தையை அணுகுவதன் மூலம் உங்கள் போட்டித்தன்மையின் அதிகரிப்பு. இந்த தொலைநோக்குக்கு, அமெரிக்காவை விட சிறந்த பங்குதாரர் யாரும் இல்லை. இந்தியாவும், அமெரிக்காவும் மதிப்புகளை பகிர்ந்து கொண்ட துடிப்பான ஜனநாயக நாடுகள், இயற்கையான நட்பு நாடுகள் என்று அவர் கூறினார். இதில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக மற்றும் தொழில்துறை மற்றும் ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Leave your comments here...