இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்ய பாகிஸ்தானிடம் இருந்து பணம் பெற்ற பிரிட்டன் எம்.பி டெபி ஆப்ரகாம்ஸ் – அம்பலமானது உண்மை

உலகம்

இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்ய பாகிஸ்தானிடம் இருந்து பணம் பெற்ற பிரிட்டன் எம்.பி டெபி ஆப்ரகாம்ஸ் – அம்பலமானது உண்மை

இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்ய பாகிஸ்தானிடம் இருந்து பணம் பெற்ற பிரிட்டன் எம்.பி டெபி ஆப்ரகாம்ஸ் –  அம்பலமானது உண்மை

இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரிட்டன் தொழிலாளர் கட்சி எம்.பி. டெபி ஆபிரகாம்ஸ் தலைமையிலான அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்று பாகிஸ்தானை புகழ்ந்ததற்காக பாகிஸ்தானிடமிருந்து பணம் பெற்றது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மத்திய அரசு, கடந்த ஆண்டு, ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப்பிரிவை நீக்கி, மாநிலத்தை, இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதையடுத்து, பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் உள்ள தொழிலாளர் கட்சி எம்.பி., டெபி ஆப்ரகாம்ஸ், கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

பிரிட்டன் பார்லிமென்டில், காஷ்மீர் விவகார ஆலோசனை குழு தலைவராக இருக்கும் அவர், மத்திய பா.ஜ., அரசின் கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தார்.கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் இருந்து டில்லிக்கு வந்த அவரிடம் முறையான, ‘விசா’ இல்லை எனக் கூறிய அதிகாரிகள், இந்தியாவிற்குள் அனுமதிக்காமல், திருப்பி அனுப்பினர்.இந்தியாவுக்குள் உரிய விசா இல்லாமல் நுழைய முயன்ற அவரை மத்திய அரசு திருப்பி அனுப்பிய நிலையில், பாகிஸ்தான் சென்ற டெபி ஆப்ரகாம்ஸ், பாக்., பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேச்சு நடத்தினார். அதன் பின்னரே, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பகுதிகளுக்கு அவர் சென்றார். பிரிட்டன் பார்லி., குழுவில் இடம்பெற்றிருந்த தொழிலாளர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் சிலர் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை முன்னிலைப்படுத்த அமைக்கப்பட்ட பிரிட்டன் அனைத்து கட்சி பார்லி.,குழு, பாகிஸ்தானிடம் இருந்து ரூ. 30 லட்சம் பணமாக பெற்றுள்ளது. அந்த அறிக்கையின்படி, பிப்ரவரி 18 முதல் 29 வரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்றதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்திடம் இருந்து பிப்ரவரி 18 அன்று இந்த குழு 29.7 லட்சம் ரூபாய் முதல் 31.2 லட்சம் ரூபாய் வரை பெற்றதாக ஒப்புக்கொண்டுள்ளது.காஷ்மீருக்கான அனைத்துக் கட்சிக் குழு, 1500 பவுண்டுகளுக்கு மேல் பெரும் தொகையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற பிரிட்டன் சட்டதாலேயே இந்த பணம் கைமாறுதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Leave your comments here...