பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில் அமர்நாத் கோயிலில் ராஜ்நாத் சிங் தரிசனம் ..!
லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அமர்நாத் கோயிலுக்குச் சென்று தரிசித்துள்ளார்
இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில்,( ஜூன்15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நாடு முழுவதும், சீன பொருட்களை (Boycott China) புறக்கணியுங்கள் என மக்கள் மத்தியில் சீனாவுக்கு எதிரான கோபம் பல இடங்களில் வெளிப்படுத்தப்பட்டது இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி இந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் டிக்டாக், ஹலோ, ஷேர் இட் உள்பட சீனாவுடன் தொடர்புடைய 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியா – சீனா இடையே இரு தரப்பிலும் படைகளை விலக்கி கொள்வதற்கான பேச்சுவார்த்தை ஒரு புறம் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் இரு நாள் பயணமாக பிரதமர் மோடி திடீரென லடாக் சென்று வீரர்களை சந்தித்து பேசினார். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் ஜவான்களை சந்தித்தும் ஆறுதல் கூறினார். இதற்கிடையே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கடந்த, ஜூலை5ம் தேதி, சீன வெளியுறவு அமைச்சர், வாங்க் யீ உடன், தொலைபேசியில் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்க் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சீன படைகள், திரும்பச் சென்றன.
இந்நிலையில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் நேற்று முதல் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதில் முதற்கட்டமாக நேற்று அவர் லடாக்கில் எல்லைப்பகுதிகளை ஆய்வு செய்தார். இதில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் விரிவான ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.மேலும் ராணுவத்தின் தயார் நிலை மற்றும் கண்காணிப்பு நிலவரங்கள் குறித்து மூத்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது லடாக் எல்லையில் தற்போது நிலவும் சூழல் குறித்து வடக்கு பிராந்திய கமாண்டர் யோகேஷ் குமார் ஜோஷி,, 14-வது படைப்பிரிவு கமாண்டரும், சீன தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருபவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் மற்றும் மூத்த அதிகாரிகள் எல்லை நிலவரம் குறித்து எடுத்துரைத்தனர்.பின்னர் லடாக்கில் பங்கோங்சோ ஏரிக்கரையில் அமைந்துள்ள லுகுங் பகுதியில் ராணுவம் மற்றும் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினர் மத்தியில் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.
Jammu & Kashmir: Defence Minister Rajnath Singh, Chief of Defence Staff General Bipin Rawat, and Army Chief General MM Naravane offered prayers at Amarnath Temple today. pic.twitter.com/CxaqiRbrSw
— ANI (@ANI) July 18, 2020
இந்த நிலையில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அமர்நாத் சென்று பனிலிங்கத்தை தரிசித்துள்ளார் ராஜ்நாத் சிங்.
Defence minister, CDS, COAS praying at Amarnath caves.
Jai Shri Mahakaal.🙏❤️🚩#Rajnathsingh #IndianArmy pic.twitter.com/uP6Br0kvpA
— Akshay Akki ಅಕ್ಷಯ್ (@FollowAkshay1) July 18, 2020
Leave your comments here...