இன்று முதல் அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் இடையேயான விமான சேவை துவங்குகிறது.!
கொரோனா வைரஸ் தொற்றால் மார்ச் 23-ந்தேதியில் இருந்து விமான போக்குவரத்திற்கு இந்திய அரசு தடைவிதித்திருந்தது. மே மாதம் 25-ந்தேதியில் இருந்து உள்நாட்டு விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி உள்நாட்டு விமான சேவை நடைபெற்று வருகிறது.
ஆனால் சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31-ந்தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. என்றாலும், வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் இந்திய அரசு இந்தியாவுக்கு அழைத்து வருகிறது.இந்நிலையில் டெல்லி, மும்பை, பெங்களூருவில் இருந்து பாரிஸ்க்கு ஜூலை 18-ந்தேதி முதல் ஆகஸ்ட் 1-ந்தேதி வரை 28 விமாங்கள் இயக்கப்படும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பூரி தெரிவித்துள்ளார்.வந்தேபாரத்’ திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் உள்ள இந்தியரை அழைத்து வர, சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டன.இந்நிலையில், மே,25 முதல், உள்நாட்டு விமான போக்குவரத்து, சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் துவக்கப்பட்டது. இதையடுத்து, மூன்று மாதங்களுக்கு மேல் நிறுத்தப்பட்ட, சர்வதேச விமான போக்குவரத்து நாளை துவங்க உள்ளது.
In an initiative to further expand our international civil aviation operations, air bubble arrangements with US, UAE, France & Germany are being put in place while similar arrangements are also being worked out with several other countries.
— Hardeep Singh Puri (@HardeepSPuri) July 16, 2020
இது குறித்து, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர், ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது:அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் இடையேயான விமான சேவையை, குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் துவக்க, ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. அதன்படி, இம்மாதம், 17-31 வரை, அமெரிக்காவிற்கு, யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம், 18 விமான சேவைகளை மேற்கொள்ள உள்ளது. டில்லி – நெவார்க் இடையே, தினசரி சேவையும், டில்லி – சான்பிரான்சிஸ்கோ இடையே, வாரம் மூன்று முறையும் விமான போக்குவரத்து மேற்கொள்ளப்படும்.ஏர் பிரான்ஸ் நிறுவனம், இம்மாதம் 18 – ஆக.,1 வரை, 28 விமான சேவைகளை வழங்க உள்ளது.
இவை, டில்லி, மும்பை, பெங்களுருவில் இருந்து, பாரிஸ் நகருக்கு இயக்கப்படும்.இதே போல, பிரிட்டன், ஜெர்மனி நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.ஜெர்மனிக்கு, லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனம், விமான சேவை வழங்க உள்ளது. இதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. பல நாடுகள், விமான சேவைக்கு ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக உள்ளன. ஆனால், கொரோனா பிரச்னை காரணமாக, பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து, படிப்படியாக விமான சேவையை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.உள்நாட்டு விமான சேவையில், தற்போது பயணியர் எண்ணிக்கை, 33 சதவீதத்தில் இருந்து,45 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இது, வரும் தீபாவளிக்குள், 60 சதவீத அளவிற்கு உயர்த்தப்படும் தெரிவித்துள்ளார்.
Leave your comments here...