பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு : மாணவிகள்: 94.80% தேர்ச்சி; மாணவர்கள்: 89.41% தேர்ச்சி.!
- July 16, 2020
- jananesan
- : 1042
- Plus2 Result
தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று திடீரென வெளியிடப்பட்டது. பொதுத்தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். இன்று வெளியான தேர்வு முடிவுகளில் 92.3 சதவீதத்தினர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவியர் 94.8 சதவீதமும், மாணவர்கள் 89.41 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மாணவர்களை விட மாணவியர் தேர்ச்சி விகிதம் 5.39 சதவீதம் அதிகமாகும்.
தமிழகத்தில் உள்ள 7,127 மேல்நிலைப்பள்ளிகளில் 2,120 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழகத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் 97.12 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தை பிடித்தது. 2வது மற்றும் 3வது இடங்கள் முறையே ஈரோடு (96.99 சதவீதம்), கோவை (96.39 சதவீதம்) உள்ளது.வரும் 27ஆம் தேதி தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் மொத்தமாக பின்னர் அறிவிக்கப்படும்.
அதிகபட்சமாக கணினி பாடப்பிரிவில் 99.51% பேரும், கணிதப் பாடப்பிரிவில் 96.31 சதவீதம் பேரும், உயிரியல் பாடப் பிரிவில் 96.14 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். விடைத்தாள் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி, வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும்.
Leave your comments here...