சீனாவில் கனமழை காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை – 3 கோடி பேர் பாதிப்பு..!

உலகம்

சீனாவில் கனமழை காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை – 3 கோடி பேர் பாதிப்பு..!

சீனாவில் கனமழை காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை – 3 கோடி பேர் பாதிப்பு..!

சீனாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி 140 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் 27 மாகாணங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் இரண்டாம் நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சீனாவில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளநீரில் சூழ்ந்துள்ளன. சாலைபோக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் தடைபட்டுள்ளன. மேலும், 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


அந்நாட்டில் ஜியாங்க்சி மாகாணத்தில் பெய்து வரும் மழையால் மிகத்தீவிர வெள்ள அபாய அவசர நிலை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது 1998ம் ஆண்டுக்கு பிறகு மிக அதிக அளவாகும். 33 நதிகளில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட நிலை இப்போதும் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.ஹூபேய் மாகாணத்திலும் இதுவரை இல்லாத அளவு திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. யாங்க்ஷி நதியில் ஹன்கோவ் நிலையத்தில் வெள்ளத்தின் அளவு 28.44 மீட்டராக உள்ளது. இது 2016ம் ஆண்டு அளவை விட மிக அதிகமாகும். மேலும் இந்த அளவானது அந்த நதியின் வரலாற்றில் 5வது மிகப்பெரியதாகும்.

Leave your comments here...