மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே சிபிஎஸ்இ பாடப்பிரிவுகள் 30 சதவீதம் நீக்கம் – மத்திய அமைச்சர் பொக்ரியால் விளக்கம்..!

இந்தியா

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே சிபிஎஸ்இ பாடப்பிரிவுகள் 30 சதவீதம் நீக்கம் – மத்திய அமைச்சர் பொக்ரியால் விளக்கம்..!

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே சிபிஎஸ்இ பாடப்பிரிவுகள் 30 சதவீதம்  நீக்கம்  – மத்திய  அமைச்சர் பொக்ரியால் விளக்கம்..!

கொரோனா தொற்று அச்சத்தால் நாடு முழுவதும் மார்ச் 16-ம் தேதி அன்று பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுத்தேர்வுகளை மத்திய, மாநிலப் பள்ளிக் கல்வி வாரியங்கள் நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. புதிய கல்வியாண்டான ஜூன் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவில்லை. கொரோனா தொற்று பரவல் காலத்தில் ஏற்பட்டுள்ள கல்வி வேலை நாட்கள் குறைப்பால், பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.

இதைத் தொடர்ந்து சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை 30 சதவீதம் வரை குறைத்துள்ளதாக மத்திய அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 190 பாடத்திட்டங்களில் அரசியல் அறிவியல் பிரிவில் ஜனநாயக உரிமைகள், இந்தியாவில் உணவு பாதுகாப்பு, கூட்டாட்சி, குடியுரிமை மற்றும் மதச்சார்பின்மை போன்ற முக்கிய அத்தியாயங்களை நீக்கியிருந்தது. இது பல்வேறு தரப்பிலும் பெரும் விமர்சனங்களை கிளப்பியிருந்தது.

இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொக்ரியால் ட்விட்டர் பதிவில்:-


மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே சிபிஎஸ்இ பாடப்பிரிவுகள் நீக்கம்; வேறு உள்நோக்கமில்லை
நிபுணர்களின் ஆலோசனை, பரிந்துரைகளை பின்பற்றியே சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைப்பு. கல்வியில் அரசியல் செய்வதை விட்டு விட்டு, நமது அரசியலில் அதிக கல்வியை புகுத்துவோம். என்று பதிவிட்டுள்ளார்.

Leave your comments here...