‘’உள்ளூர்’’ இந்தியாவை ‘’உலக’’ இந்தியாவாக மாற்ற ஒவ்வொரு இந்தியரும் சுயசார்பு இந்தியா பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் – குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்
- July 6, 2020
- jananesan
- : 1249
- Vice President
புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவதற்கான சுற்றுச்சூழலை உருவாக்குவதுடன், ‘’உள்ளூர்’’ இந்தியாவை ‘’உலக’’ இந்தியாவாக மாற்ற ஒவ்வொரு இந்தியரும் சுயசார்பு இந்தியா பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
குடியரசு துணைத்தலைவர் மாளிகையில், காணொளிக் காட்சி மூலம் எலிமென்ட்ஸ் செயலி தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், மனித ஆற்றலை செழுமைப்படுத்துல், வலுவான விநியோகச் சங்கிலியை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் நாட்டின் பொருளாதார வளத்தை பெருமளவில் அதிகரிக்க ஊக்கமளிக்கும் நோக்கத்துடன் சுயசார்பு இந்தியா தொடங்கப்பட்டதாகக் கூறினார்.
आज गुरु पूर्णिमा के पावन अवसर पर एलीमेंट्स मोबाइल एप्प का लोकार्पण करने का सुयोग प्राप्त हुआ। आत्म निर्भरता की दिशा में यह महत्वपूर्ण कदम रखने के लिए, इससे शुभ संयोग नहीं हो सकता है। pic.twitter.com/iywId42Zw4
— Vice President of India (@VPSecretariat) July 5, 2020
பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளில், நாடு முழுவதும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் இயக்கம் சுயசார்பு இந்தியா என்று குறிப்பிட்ட அவர், தொழில் தொடங்குவதற்கும், புதுமையை வளர்க்கவும் ஆரம்ப தளமாக இது திகழும் என்று கூறினார். ஊரக-நகர்ப்புற கூட்டுறவு மேம்பாட்டுக்கான சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கும் இது உதவும் என்றார் அவர்.
சுயசார்பு இந்தியாவுக்கான அழைப்பு, வெறும் பாதுகாப்பு வாதம் அல்லது தனிமை வாதத்துக்கான அழைப்பாக இல்லாமல், நாட்டின் உள்ளார்ந்த வலிமையை அங்கீகரித்து, உருவாக்குவதற்கு தேவையான நடைமுறைக்கேற்ற மேம்பாட்டு உத்தியைப் பின்பற்றுவதற்கான அழைப்பு என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார்.எட்டு இந்திய மொழிகளில் இந்தச் செயலி கிடைக்கும் என்பது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்த அவர், அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் இது கிடைக்கச் செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொருளாதாரம், பாதுகாப்பு அல்லது மனித மேம்பாடு என ஒவ்வொரு துறையிலும், இந்தியாவை முன்னணி நாடாக மாற்றுவதன் அவசியத்தை திரு. நாயுடு வலியுறுத்தினார்.குரு பூர்ணிமாவை ஒட்டி, இந்தச் செயலியை நாட்டுக்கு அர்ப்பணித்த குடியரசு துணைத் தலைவர், சுயசார்பு இந்தியாவை நோக்கிய இந்த மாறுதல் நடவடிக்கையில், குருமார்களின் முக்கியமான பங்களிப்பை நினைவுபடுத்தினார்.
Leave your comments here...