அவசரகாலக் கடன் திட்டத்தின் கீழ் ரூ.1லட்சம் கோடிக்கு மேல் கடன் வழங்க அனுமதி -மத்திய நிதியமைச்சகம்

இந்தியா

அவசரகாலக் கடன் திட்டத்தின் கீழ் ரூ.1லட்சம் கோடிக்கு மேல் கடன் வழங்க அனுமதி -மத்திய நிதியமைச்சகம்

அவசரகாலக் கடன் திட்டத்தின் கீழ் ரூ.1லட்சம் கோடிக்கு மேல் கடன்  வழங்க அனுமதி -மத்திய நிதியமைச்சகம்

அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் மட்டும் ரூ.5,567.57 கோடிக்கு அனுமதியளிக்கப்பட்டு, இதுவரை ரூ.3235.41 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

அரசு உத்தரவாதத்துடன் கூடிய 100 சதவீதம் அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், ஜுன் 26, 2020 அன்றைய நிலவரப்படி, நாடு முழுவதும் சுமார் ரூ.1லட்சம் கோடிக்கு மேற்பட்டத் தொகையைக் கடனாக வழங்க அனுமதி அளிக்கப்பட்டு, ரூ.45,000 கோடி ஏற்கனவே பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது. இதன் மூலம், 30 லட்சத்திற்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களும், இதர தொழில் நிறுவனங்களும், ஊரடங்கிற்குப் பிறகு, மீண்டும் தங்களது தொழிலைத் தொடங்க வழிவகை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் கடனுதவி கோரி விண்ணப்பித்த 2,57,970 கணக்குதாரர்களில் 1,03,395பேருக்கு, ரூ.5,567.57 கோடி கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டு, 26, ஜுன் 2020 வரை ரூ.3,235.41 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், பொதுத்துறை வங்கிகளால் மாநில வாரியாக அனுமதியளிக்கப்பட்ட கடன்தொகை விவரம் வருமாறு :

வங்கி / பிரிவு வாரியான தினசரி விவரம் (26.06.2020)

பொதுத்துறை வங்கிகள் ரூ.57,525.47 கோடியும், தனியார் வங்கிகள் ரூ.44,335.52 கோடியும், அவசர காலக்கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்க அனுமதியளித்துள்ளன. இத்திட்டத்தின் கீழ், பாரதஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. ஆகிய வங்கிகள், அதிக கடனுதவியை வழங்கியுள்ளன. 12 பொதுத்துறை வங்கிகள் அனுமதி அளித்துள்ள மற்றும் பட்டுவாடா செய்யப்பட்ட கடன் தொகை விவரம் வருமாறு :

சுயசார்பு தொகுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு தொழில்களுக்கு, ரூ.3லட்சம் கோடி கூடுதல் கடனுதவி வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அது போன்ற நிறுவனங்கள், அவர்கள் ஏற்கனவே பெற்றுள்ள கடன் தொகையில் 20% வரை, நிர்ணயிக்கப்பட்ட வட்டிவீதத்தில் கூடுதல் கடன் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.

Leave your comments here...