காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி சுட்டுக்கொலை – தோடா மாவட்டம் பயங்கரவாதிகள் இல்லாத மாவட்டமாக மாறியது – டிஜிபி தகவல்..!
- June 29, 2020
- admin
- : 1007
- Kashmir | Doda
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள தோடா மாவட்டம் பயங்கரவாதிகள் இல்லாத மாவட்டமாக மாறியுள்ளதாக ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் அமைந்துள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் குல்ச்சோகர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, குல்ச்சோகர் பகுதியில் பாதுகாப்புபடையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்புபடையினர் நடத்திய தாக்குதலில் அடையாளம் தெரியாத 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குததில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் மசூத் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் என்பது தெரியவந்தது.
Masood,hailing from Doda,fugitive from justice, was wanted in crime of rape,joined terror outfit Hizbul-Mujahideen,got killed in Anantnag today in an encounter with J&K Police/SFs. Many such criminals in past found refuge in terror organisations and got killed. pic.twitter.com/BymL1dGLy6
— Imtiyaz Hussain (@hussain_imtiyaz) June 29, 2020
இது தொடர்பாக டிஜிபி கூறுகையில்:- ஆனந்த்நாக் மாவட்டத்தில், குல்சோஹர் பகுதியில், போலீசாருடன் நடந்த மோதலில், பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் மசூத் மற்றும் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதனால், தோடா மாவட்டம் பயங்கரவாதி இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. தோடா மாவட்டத்தை சேர்ந்த மசூத் மீது பலாத்கார வழக்கு உள்ளது. இதனால், தலைமறைவான அவன், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பில் இணைந்து, காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்தான். இவ்வாறு அவர் கூறினார்.
Leave your comments here...