கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வருகிறது – மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!
- June 24, 2020
- jananesan
- : 1271
- ReserveBank
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சர் சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகளைக் கொண்டு வருவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அத்துடன் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வருவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில்:-
Cabinet Briefing https://t.co/wH78wzub8o
— Prakash Javadekar (@PrakashJavdekar) June 24, 2020
1,482 நகர கூட்டுறவு வங்கிகள், 58 பல மாநில கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும். ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள், இந்த வங்கிகளுக்கும் பொருந்தும். இதற்காக அவசர சட்டம் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டது. 1,540 கூட்டுளவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதன் மூலம், அதில் ரூ.4.84 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ள 8.6 கோடி வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதுடன், அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்.
விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் முடிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...