கொரோனா எதிரொலி : விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு பிரமாண்ட சிலை வைக்க வேண்டாம் – உத்தவ் தாக்கரே வேண்டுகோள்..!
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு பிரமாண்ட சிலை வைக்க வேண்டாம் என்று மண்டலங்களுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவுறுத்தியுள்ளார். மும்பையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 11 நாட்கள் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடங்கவுள்ளது. எனினும் கொரோனா பிரச்சினை காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் கேள்விக்குறி ஆகி உள்ளது.
இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தியை எளிமையாக கொண்டாடுமாறு சமீபத்தில் மண்டல் நிர்வாகிகளை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கேட்டு கொண்டு இருந்தார்.இதற்கு மத்தியில் மும்பையில் உள்ள பிரபல கணபதி மண்டலங்களை சேர்ந்த பிரநிதிகள் முதல்வர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார்கள்.
Maha CM to decide on Ganpati idols’ height limit on Monday https://t.co/oynIqEeWty
— TOI Mumbai (@TOIMumbai) June 20, 2020
இந்த சந்திப்பு குறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பிரச்சினைக்கு இடையே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் குறித்து கணபதி மண்டல பிரதிநிதிகள் முதல்வருடன் ஆலோசனை நடத்தினர்.அப்போது முதல்வர் சுத்தம், சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற மண்டல்களுக்கு உத்தரவிட்டார். மேலும் வழிபாட்டுக்காக உயரம் குறைந்த பிரமாண்டம் இல்லாத சிலைகளை வைக்கவும், குறைந்த இடத்தில் பந்தல் அமைக்கவும் அறிவுறுத்தினார். இதேபோல மண்டல்களை சேர்ந்தவர்கள் மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தலாம் எனவும் முதல்வர் கூறினார். இதேபோல் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது, அரசின் அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்ற தயாராக இருப்பதாக மண்டல் நிர்வாகிகள் சம்மதித்து உள்ளனர்.
Leave your comments here...