வீரர்களின் தியாகத்தை ஒரு போதும் வீணாக விடமாட்டோம் ; தகுந்த பதிலடி கொடுக்க விமானப்படை தயார் – இந்திய விமானப்படை தளபதி பதாரியா
அமைதியைக் காக்க நாடு எப்போதும் பாடுபடும், கல்வான் பள்ளத்தாக்கில் நமது வீரர்கள் செய்த “தியாகம்” வீணாகாது என இந்திய விமானப்படை தளபதி பதாரியா கூறி உள்ளார்.
ஐதராபாத்திற்கு அருகிலுள்ள விமானப்படை அகாடமியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பில் இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா கலந்து கொண்டார்
பின்னர் பேசிய அவர் எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம் மேலும் தகுந்த பதிலடி கொடுக்க விமானப்படை தயாராக உள்ளோம் என்பதில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். கல்வானில் உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் வீணாக விடமாட்டோம் என்று நான் தேசத்திற்கு உறுதியளிக்கிறேன்.
It should be very clear that we are well prepared and suitably deployed to respond to any contingency. I assure the nation that we are determined to deliver and will never let the sacrifice of the braves of Galwan go in vain: IAF Chief Air Chief Marshal RKS Bhadauria pic.twitter.com/Dmk5aos0vy
— ANI (@ANI) June 20, 2020
நமது பிராந்தியத்தில் உள்ள பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு நமது ஆயுதப்படைகள் எல்லா நேரங்களிலும் தயாராகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும். இராணுவப் பேச்சுவார்த்தைகளின் போது உடன்பாடுகள் எட்டப்பட்டதாலும், உயிர் இழப்பு ஏற்பட்டபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத சீன நடவடிக்கை இருந்தபோதிலும், எல்லை பிரச்சினை தற்போதைய நிலைமையில் அமைதியாக தீர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன என தெரிவித்தர்.
In spite of unacceptable Chinese action after agreements reached during military talks & resulting loss of lives, all efforts are underway to ensure that the current situation at LAC is resolved peacefully: IAF Chief Air Chief Marshal RKS Bhadauria pic.twitter.com/LdAwzh7a8g
— ANI (@ANI) June 20, 2020
Leave your comments here...