துபாயில் நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும் ; பாஜக மும்பை தலைவர் ராஜா உடையார் மத்திய அமைச்சருக்கு கோரிக்கை..!
துபாயில் நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டுமென பாரதிய ஜனதா கட்சி, தமிழ் பிரிவு, மும்பை தலைவர் ராஜா உடையார் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கோரிக்கை விடுத்துள்ளார்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் முக்கியமான நுழைவு தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இதனை மீண்டும் நடத்துவது குறித்து, அனைத்து மாநில அரசுகளுடன் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், அண்மையில் ஆலோசனை நடத்தியிருந்தார்.
இது குறித்து பாஜக மும்பை தமிழ் பிரிவு தலைவர் ராஜா உடையார் அனுப்பியுள்ள கடிதத்தில்:- துபாயில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் பல லட்சக்கணக்கானவர்கள் குடும்பத்தோடு வசித்து வருகிறார்கள்.சுமார் 400க்கு மேற்பட்ட மாணவர்/மாணவிகள் 26.06.2020 அன்று இந்தியாவில் நடைபெருகிற நீட் தேர்வு எழுத தயார் நிலையில் உள்ளனர்.
ஆனால் கொரோனா நோயால் வெளி நாடுகளில்/ துபாயிலிருந்து இந்தியாவிற்கு விமான போக்குவரத்து சரியான படி இல்லை.
ஆதலால் துபாயில் உள்ள மாணவர்/ மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கம் நீட் தேர்வு மையம் துபாயில் அமைத்து நீட் தேர்வு துபாயில் நடத்த வேண்டும் என துபாயிலிருந்து மாணவர்கள்/மாணவிகளின் பெற்றோர்களும் மற்றும் பார்க்கவன் ஃபார்ம் அமைப்பின் தலைவருமான திரு.ஜெயகாந்தி அவர்கள் 15.06.2020 அன்று பாரதிய ஜனதா கட்சி தமிழ் பிரிவு மும்பை தலைவர் ராஜா உடையார் அவர்களுக்கு தொலைபேசி மூலமாகவும் மற்றும் கடிதம் மூலமாகவும் *தொடர்பு கொண்டு
மேற்படி நீட் தேர்வு துபாயில் எழுத மையம் அமைத்து தரும்படி நீங்கள் (ராஜா உடையார்) மத்திய அரசிடம் அனுமதி வாங்கி தரவேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
ஆதலால் மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சி.ஜெயசங்கர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மற்றும் துபாயில் உள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரிகளிடமும் தொலைபேசி மூலமாக பேசி மற்றும் கடிதம் மூலமாகவும் மேற்படி துபாயில் உள்ள மாணவர்கள்/மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு துபாய், அமெரிக்கா, மலேஷியா, சவுதி அரேபியா. போன்ற நாடுகளிலிருந்து மாணவர்கள் இந்தியாவிற்கு நீட் தேர்வு எழுத வந்தால் சுமார் 14நாட்கள் தனிமைப்படுத்த படுகிறார்கள், தமிழ் நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி போன்ற தேர்வு மையம் மகாராஷ்டிரா, டில்லி கல்கத்தா கேரளா போன்ற மாநிலங்களில் உள்ள மையத்தில் நீட் தேர்வு எழுதிவிட்டு திரும்ப *துபாய் மற்றும் மேற்படி வெளி நாடுகளுக்கு போக விமான சேவைகள் சரியான படி இல்லாத காரணத்தால் துபாய் மற்றும் மேற்படி வெளி நாடுகளில் நீட் தேர்வு மையம் அமைத்து மாணவர்கள்/ மாணிவிகளை நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என ராஜா உடையார் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Leave your comments here...