நமது நாட்டின் வளங்களே நம்மை வல்லரசாக்கும் – பிரதமர் மோடி.!

இந்தியா

நமது நாட்டின் வளங்களே நம்மை வல்லரசாக்கும் – பிரதமர் மோடி.!

நமது நாட்டின் வளங்களே நம்மை வல்லரசாக்கும் – பிரதமர் மோடி.!

வணிக ரீதியான பயன்பாட்டுக்காக 41 நிலக்கரி சுரங்க ஏலத்தை டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கிவைத்து . இந்தியாவில் நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தும் வகையில் ஏலம் விடப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று 41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் பணியை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-


நிலக்கரித் துறையில் இந்தியாவை தன்னம்பிக்கை கொள்ள, இன்று ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வணிக நிலக்கரி சுரங்கத்திற்கான ஏலத்தை மட்டும் தொடங்கவில்லை. நிலக்கரித் துறை வளர்ச்சிக்கு போடப்பட்ட பூட்டு இன்று உடைக்கப்பட்டுள்ளது. போட்டிகளுக்கு வெளியே இதுவரை நிலக்கரி துறை இருந்து வந்தது. இதனால், வெளிப்படைத் தன்மையிலும் குறைபாடு இருந்தது. நிலக்கரி துறை வளர்ச்சிக்கு போடப்பட்ட பூட்டு இன்று உடைக்கப்பட்டுள்ளது. 41 நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தால் 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.33 ஆயிரம் கோடிக்கு முதலீடு வரும் என எதிர்பார்ப்பு உள்ளது.

2014-ம் ஆண்டுக்குப் பிறகு எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தற்போது அந்தநிலை மாறியுள்ளது. மத்திய அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக நிலக்கரித்துறை பலப்படுத்தப்பட்டுள்ளது. நாம் இறக்குமதி செய்யும் பொருள்களை நாமே தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும். நமது நாட்டின் வளங்களே நம்மை வல்லரசாக்கும். கொரோனா தொற்றால் ஏற்பட்ட நெருக்கடி நிலையை இந்தியா, நல்வாய்ப்பாக மாற்றி வருகிறது.

Leave your comments here...