முகக்கவசம் அணியாவிட்டால், 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் ; உத்தரகாண்ட் அரசு அதிரடி!
- June 15, 2020
- jananesan
- : 1247
- |Mask |COVID19
பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால், 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உத்தரகண்ட் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மார்ச் 14-ம் தேதி கொரோனா கண்டறியப்பட்டதையடுத்து தொற்றுநோய் சம்பந்தப்பட்ட சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், தனிமைப்படுத்துவது உள்ளிட்ட விதிகளை மீறுவது குற்றமாகும்.மாநில அரசின் இந்த தொற்று நோய் சட்டதிருத்தத்திற்கு ஆளுநர் பேபி ராணி மவுரியா ஒப்புதல் அளித்ததையடுத்து இது நடைமுறைக்கு வந்துள்ளது. உத்தரகண்டில் இன்று(ஜூன் 14) 31 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு 1,816 ஆக உயர்ந்தது. 24 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். 1,078 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ள நிலையில், 705 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விதிகளை மீறுவோருக்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர். கொரோனா பரவலையடுத்து 1897 ஆம் ஆண்டில் தொற்றுநோய்கள் தடுப்புச் சட்டத்தில் கேரளா மற்றும் ஒடிசா மாநிலங்கள் திருத்தம் செய்தன. தற்போது சட்டதிருத்தம் மேற்கொண்ட 3வது மாநிலமாக உத்தரகாண்ட் உருவெடுத்துள்ளது.
இதனிடையே உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோய் தொடர்பான ஒவ்வொரு உயிரிழப்பையும் தணிக்கை செய்து, அவற்றின் பின்னணியில் உள்ள காரணங்களை ஆய்வு செய்யுமாறு அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.இது இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
Leave your comments here...