பள்ளிக்கல்வி துறை அதிரடி…! அசையும் அசையா சொத்துகளை பதிவேட்டில் பதிவு செய்ய உத்தரவு..!
- September 3, 2019
- jananesan
- : 1042
அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களின் சொத்து விவரங்களை பதிவேட்டில் பதிவிட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அசையும் அசையா சொத்து விவரங்களை பதிவேட்டில் தவறாமல் பதிவு செய்து பராமரிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை மூலம் ஆணையிட்டுள்ளார். ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறையின் அறிவுறுத்தல்படி, சொத்து விவரங்களில் தவறு செய்திருக்கும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பதவி உயர்வு, அவர்களின் செயல் முறை தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படையில் நடைபெற வேண்டும் என்றும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறையை விரைந்து செயல்படுத்தவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.ஏற்கெனவே 7 ஆயிரத்து 728 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 579 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு முறை அமல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நமது நிருபர்
பாண்டியன்