புலிகளின் பாதுகாப்பு குறித்து, புலிகளின் இறப்பு பற்றி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் விளக்கம்..!

இந்தியா

புலிகளின் பாதுகாப்பு குறித்து, புலிகளின் இறப்பு பற்றி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் விளக்கம்..!

புலிகளின் பாதுகாப்பு குறித்து, புலிகளின் இறப்பு பற்றி மத்திய  சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் விளக்கம்..!

நாட்டில் புலிகளின் பாதுகாப்பு குறித்தும், நாட்டில் புலிகளின் இறப்பு எண்ணிக்கையைப் பற்றியும் ஊடகங்களில் சில பிரிவினர் சமச்சீரற்ற முறையில் செய்திகள் வெளியிட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக இந்திய அரசின் முயற்சிகளுக்குக் களங்கம் விளைவிக்க முயன்றுள்ளதாகவும், இவ்விஷயத்தை மிகைப்படுத்துவதாகவும் தெரிய வந்துள்ளன. மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றுக்கான அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான, தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பு (NTCA),பின்வரும் விஷயங்களை முன்வைக்கிறது

தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பு மூலமாக மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளால், அழிவின் விளிம்பில் இருந்த புலிகள் தற்போது மீட்டெடுக்கப்பட்டு, உறுதியான பாதையில் உள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஆய்வுகளிலிருந்து இது தெளிவாகிறது. அனைத்திந்திய புலிகள் மதிப்பீடு 2006, 2010, 2014 2018 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றன. இந்த முடிவுகள் புலிகளின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 6 சதவிகிதமாக இருந்ததைக் காட்டுகின்றன புலிகள் இயற்கையாக அழிவது என்பதை இது ஈடுசெய்கிறது. புலிகள் வாழிடங்களில் புலிகள் கொள்திறனுக்கேற்ப இந்திய நிலைமைகளைப் பொறுத்தவரை இது நல்ல சதவிகிதமாகும்.

2012-2019 ஆம் ஆண்டு காலத்தில், நாட்டில் புலிகளின் இறப்பு எண்ணிக்கை சராசரியாக சுமார் 94 ஆக இருந்தது என்பதைக் காணலாம். புலிகளின் விரைவான வளர்ச்சி விகிதம் இதை சமன் செய்துவிடுகிறது. மேலும் தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பு, மத்திய அரசால் ஆதரவளிக்கப்படும் புலிகள் திட்டம் என்ற திட்டத்தின் செயலக்கத்தால் புலிகளைத் திருடுவது கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துமீறி நுழைந்து திருடுபவர்கள் பிடிக்கப்படுவது/ தொடரப்படும் வழக்குகள் ஆகியவற்றிலிருந்து இதனைத் தெரிந்து கொள்ளலாம்.

தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிக்கைகளும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள விவரங்களும், இந்த அறிக்கைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள விதம் பதற்றத்தை உருவாக்கக் கூடியவையாக உள்ளன. நாட்டில் புலிகளின் உயிரிழப்பைத் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி NTCA மூலமாக மத்திய அரசு புலிகளைக் காக்கும் திட்டத்திற்கு அளித்து வரும் தொழில்நுட்ப, நிதி ஆதரவின் காரணமாக புலிகள் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் இந்த அறிக்கைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.மிகைப்படுத்துதல் எதுவும் இல்லாத வண்ணம், இது குறித்து அச்சப்பட வேண்டும் என்று குடிமக்களை நம்பச் செய்யாத வண்ணம், ஊடகங்கள் மேற்கூறிய விவரங்களை நாட்டுக்கு எடுத்துச் சொல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Leave your comments here...