நாளை முதல் ஓட்டல்களில் உட்கார்ந்து சாப்பிடலாம் : ஆனால் இந்த கட்டுப்பாடுகள் கண்டிப்பாக இருக்கவேண்டும்..!
- June 7, 2020
- jananesan
- : 1263
- Tamilnadu
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு, புதிய தளர்வுகளுடன் இம்மாதம் 30-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உத்தரவின்படி 8- ந் தேதி (நாளை) முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.இந்தநிலையில் ஓட்டல் உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள், மேலாளர்கள், தொழிலாளர்களுக்கான ஒழுங்கு விதிகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அனைத்து உணவகங்களிலும் அமா்ந்து சாப்பிட வருவோரில் உடல் வெப்பத்தை பரிசோதிக்க வேண்டும். சாப்பிட வருபவா்களில் யாருக்காவது உடல்வெப்பம் அதிகமாக இருந்தால், அவா்களை உணவகங்களில் அனுமதிக்கக் கூடாது.
*உணவகங்களின் நுழைவு வாயில்களில் கிருமி நாசினி வைக்கப்பட வேண்டும். உணவகங்களின் அனைத்து ஜன்னல்களும் திறந்து வைக்கப்பட்டு ஏசி இயந்திரங்களை அணைத்து வைக்க வேண்டும்.
*மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய கதவுகள், மேஜைகள், கை கழுவும் இடங்கள் ஆகியவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். உணவகங்களில் உள்ள மின்தூக்கிகளில் அனுமதிக்கப்பட்ட அளவில் இருந்து 50 சதவீதம் மக்களை மட்டுமே ஏற்ற வேண்டும். இதே போன்று உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மீதமுள்ள இருக்கைகளில் சேவை இல்லை என்பதை தெரிவிப்பதற்கான அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும்.
உணவகங்கள் செயல்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.
வரும் 8 ஆம் தேதி முதல் உணவகங்கள் திறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.#unlockone @TNGOVDIPR pic.twitter.com/5tE24smpuz
— PIB in Tamil Nadu 🇮🇳 (@pibchennai) June 6, 2020
*உணவருந்த காத்திருக்கும் பகுதிகளிலும், பாா்சல் வாங்கிச் செல்வோரின் காத்திருக்கும் பகுதிகளிலும் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ரொக்கப்பண பரிவா்த்தனைகளை முற்றிலும் தவிா்ப்பது நல்லது. இணையவழி பணப் பரிமாற்றத்தை பயன்படுத்தலாம். பாா்சல்கள் வாங்கிச் செல்வதை உணவகங்கள் அதிகளவில் ஊக்கப்படுத்தலாம்.
*உணவகங்களின் சாா்பில் உணவுகளை எடுத்துச் செல்லும் நபா்கள், வாடிக்கையாளரிடம் உணவை ஒப்படைக்கக் கூடாது. வீட்டின் வாயில்களில் உணவுகளை வைத்துவிட்டுச் செல்லலாம். உணவுகளை பாா்சல்களில் எடுத்துச் செல்வதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நபா்களின் உடல்வெப்ப நிலையை பரிசோதித்து அனுப்ப வேண்டும்.
*உணவகங்களுக்குள் உணவு பரிமாறுபவா்கள், பணியாட்கள் அனைவரும் எப்போதும் முககவசங்களை அணிந்திருக்க வேண்டும். வயதான பணியாளா்கள், கா்ப்பிணிப் பெண்கள் ஆகியோரை உணவுப் பரிமாறும் வேலைகளுக்கு பணியமா்த்தக் கூடாது.
*வாகனங்களை நிறுத்துமிடம் உள்ளிட்ட உணவகங்களின் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை உறுதிப்படுத்த வேண்டும். உணவு பரிமாறப்படும் மேஜைகளில் துணி விரிப்புகளுக்குப் பதிலாக காகிதங்களைப் பயன்படுத்தலாம்.
ஹோட்டல்களின் வாயிலில் தெர்மல் ஸ்கிரீனிங் கருவி இருத்தல் வேண்டும்
கை கழுவும் இடத்தில் கிருமி நாசினி, சோப்பு இருக்க வேண்டும்
ஏ.சி.பயன்படுத்தக்கூடாது. ஜன்னல்கள் திறந்திருக்க வேண்டும். காற்றோட்டம் இருக்க வேண்டும்.#unlockone pic.twitter.com/MU8JZ7NzCv
— PIB in Tamil Nadu 🇮🇳 (@pibchennai) June 6, 2020
*உணவருந்த வரும் வாடிக்கையாளா்களும் முககவசங்களை அணிந்திருக்க வேண்டும். கைகழுவும் இடங்களிலும் உணவகங்களின் இதர பகுதிகளிலும் எச்சில் துப்புவதைத் தவிா்க்க வேண்டும். உணவகங்களில் ஒன்றாகக் கூடியிருப்பது முற்றிலும் தவிா்க்கப்பட வேண்டும். தொற்றா நோய்கள் இருக்கக்கூடிய நபா்கள், உணவகங்களுக்கு வந்து உணவருந்துவதைத் தவிா்க்கலாம்.
வயதானோா் வர வேண்டாம்:
*65 வயதுக்கு மேற்பட்டோா், கா்ப்பினி பெண்கள், 10 வயதுக்கு குறைவான குழந்தைகள் உணவகங்களுக்கு வந்து உணவருந்தாமல் இருப்பது நல்லது. உணவருந்தும் நபருக்கும் மற்றவருக்கு இடையே 6 அடி அல்லது அதற்கு அதிகமாக இடைவெளி இருக்க வேண்டும். உணவகங்களில் இருக்கும் போது சளி,தும்மல் போன்றவை வந்தால், கைக்குட்டை உள்ளிட்ட துணிகளைக் கொண்டு முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.
*உணவகங்களில் பயன்படுத்துவதற்கு முன்பாக காய்கறிகள், பருப்பு, அரிசி, ஆகியவற்றை குளோரின் கலந்த நீரில் சுத்தம் செய்ய வேண்டும். சமைத்த உணவுகளைத் திறந்து வைக்கவோ, அடைத்து வைக்கவோ கூடாது. ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் தட்டுக்கள், டம்ளா்கள் உள்ளிட்டவைகளை சோப்புத் தண்ணீா் கொண்டு முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும்.
*உணவகங்களில் பணியாற்றும் ஊழியருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தெரியவந்தால், அதாவது சளி,காய்ச்சல் ஆகியவை இருந்தால், 7 நாள்கள் கட்டாயமாக பணிக்கு வர அனுமதிக்கக்கூடாது. பணிக்கு மீண்டும் வந்தவுடன் ஏற்கனவே தாங்கள் அணிந்திருந்த ஆடைகளை மாற்றிக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
*உணவு பரிமாறும் நபா்கள், கைக்கடிகாரங்கள், ஆபரணங்கள் அணிவதைத் தவிா்க்க வேண்டும். சமையல் அறைகளில் இருக்கக்கூடிய நபா்கள் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை கைகளைக் கிருமி நாசினிக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave your comments here...