பயணிகளுக்கு உலகத்தரத்திலான வசதிகள் : இந்திய ரயில்வே நடவடிக்கை…!!
- June 6, 2020
- jananesan
- : 1021
- IndianRailway
இந்திய ரயில்வே தனது பயணிகளுக்கு உலகின் சிறந்த ஒட்டு மொத்த ரயில்வே இணைப்பு மூலம் உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்க உறுதிபூண்டுள்ளது. தனது பயணிகளுக்கு தூய்மையான சுற்றுச்சூழலையும், சுமுகமான பயண அனுபவத்தையும் வழங்குவதற்காக, தூய்மை இந்தியா, தூய்மை ரயில்வே முன்முயற்சியின் கீழ் இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அவற்றின் சில முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன: 2019-20 ஆம் ஆண்டில் 14,916 ரயில் பெட்டிகளில் மக்கும் தன்மை உள்ள 49,487 கழிப்பறைகள் நிறுவப்பட்டன. இது 68,800 ரயில் பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ள 2,45,400 க்கும் அதிகமான மக்கும் தன்மை உள்ள கழிப்பறைகளின் மொத்த எண்ணிக்கையை 100 சதவிகித பாதுகாப்புடன் கொண்டு செல்கிறது.
*2019 அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளில் இருந்து ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள் பயன்பாடு முற்றிலுமாக இல்லை.
*ரயில்வேயின் முயற்சிகளைக் கருத்தில் கொண்டு, ‘தூய்மை செயல்திட்டத்தை’ செயல்படுத்துவதில் மேற்கொண்ட சிறந்த முயற்சிக்காக ரயில்வே அமைச்சகம் தேர்வு செய்யப்பட்டு, 2019 செப்டம்பர் 06 ஆம் தேதி அன்று இந்தியக் குடியரசுத் தலைவரால் விருது வழங்கப்பட்டது.
*சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பை அமல்படுத்தியதற்காக 200 ரயில் நிலையங்களுக்கு சர்வதேசத் தர நிர்ணயக் கழகமான ஐஎஸ்ஓ 14001 சான்றிதழ் 2019- 20 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.ஒருங்கிணைந்த இயந்திரத் தூய்மையாக்கல் திட்டத்தின் வசதி தற்போது 953 நிலையங்களில் வழங்கப்படுகிறது.
*தூய்மைத் தரங்கள் குறித்த பயணிகளின் உணர்வு பற்றிய சுயேச்சையான மூன்றாம் தரப்புக் கணக்கெடுப்பு 720 ரயில் நிலையங்களில் 2019-20 ஆம் ஆண்டில் 407 நிலையங்களில் நடத்தப்பட்டது.
*ராஜதானி, சதாப்தி, டுரொன்டோ மற்றும் இதர முக்கியமான நீண்டதூர சாதாரண/விரைவு ரயில்கள் உள்ளிட்ட 1100க்கும் மேற்பட்ட இணை ரயில்களில் சுத்தம் செய்வதற்கு தூய்மைப் பணியாளர்களின் சேவை வசதி உள்ளது ரயில்கள் இயங்கும்போது கழிப்பறைகள், கதவு வாயில்கள், இடைவழிகள் மற்றும் பயணிகளின் பெட்டிகளை இவர்கள் சுத்தம் செய்வார்கள்.
*ரயில்கள் இயங்கும் போது தூய்மைப் பணியாளர்களின் சேவையை வேண்டுவோர் அவர்களுடன் தொடர்பு கொள்வதற்காக “கோச்-மித்ரா” என்ற குறுந்தகவல் சேவை வசதி 1060க்கும் மேற்ப்பட்ட இணை ரயில்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
*குளிர் சாதன வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் பயணிகளுக்கு, துணிகளை சலவை செய்யும் தரத்தை மேம்படுத்த இயந்திரமயமாக்கப்பட்ட சலவை வசதி அமைக்கப்பட்டுள்ளது. 2019-20 நிதியாண்டில் 8 இயந்திர சலவை வசதி சாதனங்கள் நிறுவப்பட்டன (மொத்தம் 68).
*ரயில் நிலையங்களில் உருவாக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை சுற்றுச்சூழல் நட்பு முறையில் குறைக்கவும் மறுசுழற்சி செய்யவும் மற்றும் அவற்றை வெளியேற்றுவதற்கும் ஒரு முன் முயற்சியாக, பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்கும் இயந்திரங்களை (பிபிசிஎம்) நிறுவ மண்டல ரயில்வேயால் விரிவான கொள்கை வழிகாட்டுதல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போது, இந்திய ரயில்வேயில் பல்வேறு மாவட்ட தலைமையக ரயில் நிலையங்கள் உள்ளிட்ட 229 ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்கும் 315 இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
*ரயில் பெட்டிகளைத் தானாகவே சுத்தம் செய்யும் தானியங்கி சாதனங்கள் (ஏ.சி.டபிள்யூ.பி) 2019-20 ல் 8 இடங்களில் நிறுவப்பட்டுள்ளன (ஒட்டுமொத்தமாக 20). ரயில் நிலையங்களில் நீர் நிரப்பும் நேரத்தைக் குறைப்பதற்காக விரைவாக நீர் நிரப்பும் சாதனங்கள் 29 இடங்களில் 2019 -20இல் (ஒட்டுமொத்தமாக 44) நிறுவப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.
Leave your comments here...