புகழ் பெற்ற குருவாயூர் கோவிலில் திருமணத்திற்கு அனுமதி.! ஆனால் கண்டிப்பாக இவை இருக்கவேண்டும்..?
இந்தியாவில் கொரோன வால் பாதிக்கப்பட்ட முதல் மாநிலம் கேரளா. இங்கு ஊரடங்கு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதனால் அலுவலகம், கடைகள், போக்குவரத்து பெரும் பாதிப்படைந்துள்ளது. கேரளாவில் சிறிய கோவில்கள் முதல் புகழ்பெற்ற கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன. ஆனால் கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு அனுமதி இல்லை.கோவிலில் தரிசனத்துக்கு அனுமதி கேட்டு பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கேரள அரசு சில தளர்வுகளை கொண்டு வந்துள்ளன. அதன்படி பக்தர்களின் கோரிக்கையை ஏற்று குருவாயூர் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டது.மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் 5, 5 பேராக சமூக இடைவெளி விட்டு குறிப்பிட்ட இடத்தில் நின்று சாமி தரிசனம் செய்யலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி கேரளாவில் புகழ் பெற்ற குருவாயூர் கோவிலில் உள்ளூர் பக்தர்களுக்கு ஜூன் 1 முதல் அனுமதி அளிக்கப்பட்டது. பக்தர்கள் கிழக்கு நடை பந்தல் என்ற இடத்தில் இருந்து சமூக இடைவெளி விட்டு 5 பேர் அனுதிக்கப்படுகிறார்கள். புகழ்பெற்ற குருவாயூர் கோவிலில் வைகாசி மாதத்தில் தினமும் நூற்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும்.இதனால் கோவில்களில் கூட்டம் அலைமோதும். தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதால் குறைந்த அளவிலேயே பக்தர்கள் கோவிலுக்கு வந்து சென்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தற்போது மத்திய மாநில அரசுகள் 5-ம் கட்ட ஊரடங்கு காலகட்டத்தில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி நாளை (4ம் தேதி ) முதல் குருவாயூர் கோவில்களில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு திருமணம்செய்து கொள்ள குருவாயூர் கோவிலுக்கு மாநில அரசு அனுமதி அளித்து உள்ளது.இதன்படி கோவில் நிர்வாகம் மாவட்ட கலெக்டருடன் கலந்து ஆலோசனை நடத்தியது. அதன் பின்னர் தேவசம் போர்டு தலைவர் தெரிவித்து இருப்பதாவது: ஒரு நாளைக்கு அதிகபட்சம் 60 திருமணங்களை நடத்தலாம். காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையில் திருமணம் நடத்திக்கொள்ளலாம். இதற்கான முன்பதிவு உடனடியாக துவங்குகிறது.
மேலும் திருமணம் செய்து கொள்பவர்களின் புகைப்படத்துடன் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான மருத்துவஅதிகாரிகளின் சான்றிழதல் உள்ளிட்டவை சமர்ப்பிக்க வேண்டும். தொடர்ந்து மணமகன், மணமகள் அழைத்து வரும் போட்டோகிராபர்களுக்கு அனுமதி கிடையாது தேவஸ்வம் போட்டோகிராபர்கள் பணியில் அமர்த்தப்படுவர். காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையில் திருமணத்தை முன் பதிவு செய்து கொள்ளலாம். திருமண விழாவில் பங்கு கொள்பவர்கள் அனைவரும் கோவிட் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என தேவசம் போர்டு தலைவர் தெரிவித்து உள்ளார்.
Leave your comments here...