வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை 50 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளார்கள்.!

இந்தியா

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை 50 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளார்கள்.!

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை 50 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளார்கள்.!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் இந்தியாவுக்குள் வரமுடியாமல் தவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துவர வந்தே பாரத் மிஷன் தி்ட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 6ம் தேதி முதல் 14ம் தேதிவரை முதல்கட்டமாக செயல்படுத்தப்பட்ட வந்தே பாரத் மிஷன் தி்ட்டம் மூலம் வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன், அமெரிக்கா, பிலி்ப்பைன்ஸ், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 15 ஆயிரம் இந்தியர்கள் 64 விமானங்கள் மூலம் தாயகம் அழைத்துவரப்பட்டனர்.

2வது கட்ட வந்தேபாரத் மிஷன் திட்டம் மே 16-ம்தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் 18 நாடுகளில் இருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.இந்த 2ம் கட்ட மீட்புப்பணியில் இந்தோனேசியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, கனடா, ஜப்பான், நைஜிரியா, கஜகஸ்தான், உக்ரைன், கிர்கிஸ்தான், பெலாரஸ், ஜார்ஜியா, தஜிகிஸ்தான், ஆர்மீனியா உள்ளிட்ட 18 நாடுகளில் இருந்து இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதனிடையே, 2வது கட்ட வந்தே பாரத் மிஷன் திட்டம் வரும் ஜூன் 13ம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை ஐம்பதாயிரம் இந்தியர்கள் நாடு திரும்பி உள்ளதாக, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்துளார். உலக நாடுகள் முழுவதும் கொரோனா பரவி உள்ளதால், வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க மே 6 ஆம் தேதி வந்தே பாரத் திட்டம் தொடங்கப்பட்டு, இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். அதில், மே 31 ஆம் தேதி அன்று மட்டும் மூவாயிரத்து 564 இந்தியர்கள் நாடு திரும்பிய உள்ளதாக, ஹர்திப் சிங் பூரி தெரிவித்தார்.

Leave your comments here...