இந்தியப் பெருங்கடல் இரு நாடுகளையும் இணைந்திருக்கிறது ; இந்திய சமோசா நம்மை பிணைத்திருக்கிறது : ஆஸ்திரேலிய பிரதமருக்கு மோடி பதில்

உலகம்

இந்தியப் பெருங்கடல் இரு நாடுகளையும் இணைந்திருக்கிறது ; இந்திய சமோசா நம்மை பிணைத்திருக்கிறது : ஆஸ்திரேலிய பிரதமருக்கு மோடி பதில்

இந்தியப் பெருங்கடல்  இரு நாடுகளையும் இணைந்திருக்கிறது ; இந்திய சமோசா நம்மை பிணைத்திருக்கிறது : ஆஸ்திரேலிய பிரதமருக்கு மோடி பதில்

கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடா்பாக பல்வேறு நாட்டு தலைவா்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் தொடா்ச்சியாக கலந்துரையாடி வருகிறாா். அதுபோல, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் வருகிற ஜூன் 4-ஆம் தேதி காணொலி வழியில் ஆலோசனை நடத்த உள்ளாா்.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்த ஆலோசனைக் கூட்டத்தைக் குறிப்பிட்டு தனது சுட்டுரை பக்கத்தில் பதிவு ஒன்றை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.


அதில் ‘இந்த ஞாயிறு எனக்கு சமோசாவும் மாங்காய் சட்னியும்தான் சிற்றுண்டி. இவற்றை முழுவதுமாக நானே செய்துள்ளேன். இந்த வாரம் காணொலி வழியில் பிரதமா் நரேந்திர மோடியுடன் எனது ஆலோசனை நடைபெற உள்ளது துரதிருஷ்டவசமானது. இந்த சைவ சமோசாக்களை, பிரதமா் மோடியுடன் பகிா்ந்துகொள்ள இயலாமல் போய்விட்டதே!’ என்று அந்தப் பதிவில் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளாா். அந்தப் பதிவுடன், தானே தயாரித்த சமோசாக்கள் மற்றும் மாங்காய் சட்னியுடன் உள்ள புகைப்படத்தையும் ஸ்காட் மோரிசன் இணைத்துள்ளாா்.

ஆஸ்திரேலிய பிரதமரின் இந்த சுட்டுரைப் பதிவுக்கு, பிரதமர் மோடி, தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிலளித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளாா்.


அதில், ‘இரு நாடுகளும் இந்தியப் பெருங்கடலால் இணைந்திருக்கிறது; இப்போது இந்திய சமோசா நம்மை பிணைத்திருக்கிறது. நீங்கள் வைத்திருக்கும் சமோசாக்கள் பாா்க்கவே சுவையாக இருக்கின்றன! கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றியடைந்தவுடன், நாம் ஒன்றாக சமோசாவை உண்டு மகிழ்வோம். காணொலி வழியாக ஜூன் 4-ஆம் தேதி நடைபெறும் நமது ஆலோசனைக் கூட்டத்தை ஆவலுடன் எதிா்நோக்கியிருக்கிறேன்’ என்று அந்தப் பதிவில் பிரதமா் மோடி கூறியுள்ளாா்.

Leave your comments here...