தமிழகத்தில் ஜூன்-1 முதல் எந்தெந்த பகுதியில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கபடுகிறது என்று தெரியுமா…?
- May 30, 2020
- jananesan
- : 1442
- IndianRailway
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 31-ந் தேதியுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும் கொரோனா பரவுவது குறையவில்லை. நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை துவங்குகிறது. கடுமையான கெடுபிடிகளுக்கு மத்தியில் தமிழகத்திலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், இந்தியா முழுவதும் அனைத்து ரயில் சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கோவை – மயிலாடுதுறை, மதுரை – விழுப்புரம், திருச்சி – நாகர்கோவில், கோவை-காட்பாடி ஆகிய வழித்தடங்களில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஏற்கெனவே, இந்தத் தடங்களில் ரயில்களை இயக்குமாறு தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று ரயில்வே வாரியம் இந்த ஒப்புதலை அளித்துள்ளது. பொது முடக்கம் காரணமாகத் தடை செய்யப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவை தமிழகத்தில் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை தவிர்த்து சில தடங்களில் சிறப்பு ரயில் போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...