“தி அன்டோல்ட் வாஜ்பாய்” மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது.!
- August 27, 2019
- jananesan
- : 901
பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் வாஜ்பாய். கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது வாழ்க்கை வரலாறு ‘‘The Untold Vajpayee’’ என்ற பெயரில் என்.பி.உல்லேக் என்பவரால் புத்தகமாக எழுதப்பட்டு வெளியானது.
இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷிவ ஷர்மா மற்றுன் சீஷன் அஹமது ஆகியோருக்குச் சொந்தமான அமாஸ் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ‘தி அன்டோல்ட் வாஜ்பாய்’ புத்தகத்தை திரைப்படமாக உருவாக்குவதற்கான உரிமையைப் பெற்றுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷர்மா, “இத்தகைய அதிகம் பேசப்படாத கதநாயகன் ஒருவரது வாழ்க்கையை திரையில் கொண்டு வருவதில் மகிழ்ச்சியாகவும், கவுரவமாகவும் உள்ளது” என்று கூறியுள்ளார். இந்தப் படத்துக்கான திரைக்கதை உருவாக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாகவும், பணிகள் நிறைவடைந்தவுடன் இயக்குநர் மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெறும் என்றும் படத்துக்கு ‘தி அன்டோல்ட் வாஜ்பாய்’ என்பதே டைட்டிலாக இருக்கும் என்றும் அஹமது தெரிவித்துள்ளார்.