தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் : சென்னை கமிஷனரிடம் பாஜகவினர் மனு..?
- May 19, 2020
- jananesan
- : 1233
- DMK | BJP
திமுக எம்.பி தயாநிதிமாறன், மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக்கோரி சென்னை காவல்துறை ஆணையர் அவர்களிடம் பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
‘தமிழக தலைமைச் செயலரை கடந்த 13-தேதியன்று திமுக எம்.பி.க்கள் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது தயாநிதி மாறன், ‘தலைமை செயலர் எங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினார். நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா, தாழ்த்தப்பட்ட ஆட்களா’ எனக் கேள்வி எழுப்பினார்.
தாழ்த்தப்பட்ட மக்களைத் தான் மூன்றாம் தர மக்கள் போல நடத்துவார்கள். மற்ற சாதியினரை அப்படி நடத்தமாட்டார்கள் என்பது போல் தயாநிதி மாறனின் பேச்சு அமைந்துள்ளது. இது குறித்து பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து இருந்தது.
மேலும் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக சார்பாக தமிழக காவல் துறை தலைவர் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோரை நேற்று நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.@Murugan_TNBJP @NarendiranksB pic.twitter.com/4lOOdGKoSU
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) May 19, 2020
இந்நிலையில் தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக சார்பாக தமிழக காவல் துறை தலைவர் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோரை நேற்று நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. இதில் பாஜக நாகேந்திரன், கேடி.ராகவன், பிரசாத் ஆகியோர் உடன் இருந்தனர்..
Leave your comments here...