மோடி டிரம்ப் சந்திப்பு.! காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நாட்டின் தலையீடு தேவையில்லை மோடி திட்டவட்டம்..!!

அரசியல்

மோடி டிரம்ப் சந்திப்பு.! காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நாட்டின் தலையீடு தேவையில்லை மோடி திட்டவட்டம்..!!

மோடி டிரம்ப் சந்திப்பு.! காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நாட்டின் தலையீடு தேவையில்லை மோடி திட்டவட்டம்..!!

பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் ஜி-7 நாடுகளின் மாநாடு கடந்த 6 நாட்களாக நடைபெற்றது. இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான், கனடா ஆகிய ஏழு நாடுகளின் தலைவர்களுடன், இந்தியா, செனகல் நாட்டின் தலைவர்களும் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்க  பியாரிட்ஸ் சென்ற பிரதமர்  மோடி, அங்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அண்டனியோ குட்ரெஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மாநாட்டில் பல்வேறு தலைவர்களையும் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதே போன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பையும் அவர் சந்தித்தார்.

இந்த கருத்தரங்கத்தில் பேசிய  பிரதமர் மோடி  அவர், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஒழிப்பு, நீர்மேலாண்மை, சூரிய ஒளி மின்னுற்பத்தி உள்ளிட்டவற்றில் இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

அமெரிக்க அதிபர் டிரம்புடன், பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மோடி, இந்தியா பாகிஸ்தான் இடையிலான பிரச்சனைகள் அனைத்துமே இருதரப்பு விவகாரங்களாகும் என்றார். இந்த பிரச்சனைகளை தீர்க்க மூன்றாவது நாட்டின் உதவியை நாடப்போவதில்லை என்று  அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். 1947 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே நாடுகளாக இருந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இரு தரப்பு பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்றார்.

இதன் பின்னர் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்: காஷ்மீர் விவகாரம் குறித்து மோடியுடன் பேசியதாக கூறினார். காஷ்மீர் விவகாரம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக மோடி நம்பிக்கை தெரிவித்ததாக அவர் கூறினார்.இதுகுறித்து இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும், காஷ்மீர் விவகாரம் இருதரப்பு பிரச்சனை என்றும், இதில் இரு நாடுகளுமே நல்ல முடிவு எட்டும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

Comments are closed.