முக கவசம் அணியாதவர்களுக்கு 3 மாதம் சிறை.! எந்த நாடுகளில் தெரியுமா…?
சீனாவின் மத்திய நகரமான உகானில் டிசம்பர் 1-ந் தேதி கொரோனா வைரஸ் தென்பட்டது. இந்த 5 மாத காலத்தில் ஏறத்தாழ 200 நாடுகளில் பரவிவிட்டது. 46 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதித்துள்ள இந்த வைரஸ், 3 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி கொண்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடுகள் வலியுறுத்தி வரும் 2 அம்சங்களில் முதல் அம்சம், அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். இரண்டாவது அம்சம் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதாகும்.
முகக்கவசத்தை இன்னொருவருக்குக் கொடுப்பது என்று பகிர்ந்து கொள்ளக் கூடாது. குறிப்பிட்ட முகக்கவசத்தை ஒருவர் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.பொது இடங்களில் பல்வேறு இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியாவிலும் அண்மையில் அறிவித்திருக்கின்றன. இது வெறுமனே முகக்கவசம் அணிவது மட்டுமல்ல. முகக்கவசத்தை சரியாக விதிமுறைப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு, ஒருவர் தமது பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும்.
இந்நிலையில் வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத், கத்தார் உள்ளிட்டவற்றில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு அங்கமாக, குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம், முக கவசம் அணியாதவர்களுக்கு 3 மாதம் சிறை அல்லது 5 ஆயிரம் தினார், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 12 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் கத்தாரிலும், 3 மாத சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...