தடுப்பூசியை உருவாக்குவதில் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறது – அதிபர் டிரம்ப்

இந்தியாஉலகம்

தடுப்பூசியை உருவாக்குவதில் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறது – அதிபர் டிரம்ப்

தடுப்பூசியை உருவாக்குவதில் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறது –  அதிபர் டிரம்ப்

கொரோனாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பல்வேறு தொழில்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் அமெரிக்காவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பும், உயிர்ப்பலியும் ஏற்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி இல்லாத கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.


இந்நிலையில் இதுதொடர்பாக, அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடி எனக்கு மிகவும் நல்ல நண்பர் என்பது உங்களுக்குத் தெரியும். கொரோனாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் நன்கொடையாக வழங்கப்படும்.

இந்தாண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்து கிடைத்துவிடும் என நம்புகிறேன். தடுப்பூசியை உருவாக்குவதில் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறது.கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியை இந்தியாவுடன் சேர்ந்து வீழ்த்துவோம் என பதிவிட்டுள்ளார்.

Leave your comments here...