ராமாயணம் தொடரை 7.7 கோடி பேர் பார்த்து உலக சாதனை..!!
கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தபின்னர் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனல் இந்நாடகத்தை மறு ஒளிபரப்பு செய்தது. இந்நிலையில், இந்த நாடகம் உலகளவில் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களால் காணப்பட்ட நிகழ்ச்சி என்ற சாதனையை படைத்துள்ளதாக தூர்தர்ஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தூர்தர்ஷன் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில், “உலக சாதனை!! தூர்தர்ஷனில் மறுஒளிபரப்பு செய்யப்பட்ட ராமாயணா நாடகம் உலக சாதனைகளை முறியடித்துள்ளது. ஏப்ரல் 16ஆம் தேதியன்று இந்நாடகத்தை 7.7 கோடி பேர் கண்டுகளித்துள்ளனர். இதனால் உலகிலேயே அதிக பார்வையாளர்களால் காணப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற சாதனையை ராமாயணா படைத்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks to all our viewers!!#RAMAYAN – WORLD RECORD!! pic.twitter.com/EGLYwjkIey
— Doordarshan National (@DDNational) May 2, 2020
இதற்கு முன்பு உலகிலேயே அதிக பார்வையாளர்களால் காணப்பட்ட நிகழ்ச்சி என்ற சாதனையை பிரபல ஆங்கில நாடகமான கேம் ஆஃப் த்ரோன்ஸ் படைத்திருந்தது. நீல்சன் நிறுவனத்தின் தகவல்படி, கேம் ஆஃப் த்ரோன்ஸ் நாடகத்தின் இறுதி எபிசோடை ஹெச்பிஓ தொலைக்காட்சி சேனலில் 1.36 கோடி பார்வையாளர்கள் கண்டுள்ளனர். ஆனால் இதைவிட 6 மடங்கு அதிகமான பார்வையாளர்கள் ராமாயணா நாடகத்தை ஏப்ரல் 16ஆம் தேதியன்று கண்டுள்ளதாக தெரிகிறது.
உலக சாதனை புரிவது ராமயணா நாடகத்திற்கு புதிதல்ல. 1987ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரை உலகிலேயே அதிக பார்வையாளர்கள் கண்ட நாடகம் என்ற சாதனையை ராமாயணா படைத்திருந்தது. கொரோனா ஊரடங்கு தொடங்கிய பின்னர் 80களின் பிரபல நாடகங்களை மறுஒளிபரப்பு செய்ய தூர்தர்ஷன் நிறுவனம் முடிவெடுத்தது. மறுஒளிபரப்பு செய்யப்பட்ட நான்கு நாட்களில் 17.4 கோடி பார்வையாளர்களை ராமாயணா ஈர்த்தது.
Leave your comments here...