தப்லீக் ஜமாத் தலைவர் பதிலில் திருப்தி இல்லாததால் அவருக்கு 5- வது நோட்டீஸ் அனுப்ப டெல்லி போலீசார் முடிவு
டெல்லி நிஜாமுதீன் தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா முகமது சாத் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். ஏற்கனவே அவர் மீது டெல்லி காவல்துறை கொலை வழக்கை பதிவு செய்துள்ளார்கள். டெல்லி நிஜாமுதீன் மார்க்கஸில் நடத்திய மார்ச் மாத மாநாட்டில், பங்கேற்ற ஏராளமானோருக்கு கொரோனா வைரஸ் பாதித்த நிலையில் மவுலானா முகமது சாத் மீது கொலை வழக்கு பாய்ந்தது.இந்தியாவில் 35 சதவீத கொரோனா பாதிப்புக்கு தப்லீக் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் தான் காரணம் என்று மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது. அத்துடன் அந்த மாநாட்டில் பங்கேற்ற 26,000 பேர் தனிமைப்படுத்திக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறியது.
இந்நிலையில் விசா விதிமுறைகளை மீறியதாக 1800 வெளிநாட்டு தப்லீக் ஜமாத் உறுப்பினர்களின் பாஸ்போர்ட்களை மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் முடக்கியது.தற்போது அமலாக்க இயக்குநரகம் அவர் மீது பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டி உள்ளது. மவுலானா சாத் மற்றும் ஜமாத் மற்றும் பிறருடன் தொடர்புடைய அறக்கட்டளைகளுக்கு எதிரான அமலாக்க வழக்கு தகவல் அறிக்கை (ஈ.சி.ஐ.ஆர்) டெல்லி போலீஸ் வழக்கின் அடிப்படையில் அமலாக்க துறையால் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தப்லிக் – இ – ஜமாத் தலைவர், மவுலானா சாத் கந்தால்வி கடந்த, 31ம் தேதி, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, மவுலானா சாத் கந்தால்விக்கு, போலீசார் இரண்டு முறை, ‘சம்மன்’ அனுப்பினர்.
கொரோனா தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத்தை டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு போலீசார் 4 முறை அழைத்து விசாரணை நடத்தினர். ஆனால் அவரது பதில் திருப்தி இல்லாததால் அவருக்கு 5-வது நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்து உள்ளனர்.நான்காவது விசாரணையில் புலனாய்வு நிறுவனம் மார்க்கஸின் வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோக்கள் குறித்த விசாரணை நடத்தியது. இருப்பினும், குற்றப்பிரிவின் அறிவிப்புக்கு எதிராக மதத் தலைவர் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக மவுலானா சாதின் மூன்று மகன்களையும் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தப்லீக் ஜமாத் மற்றும் வளைகுடா நாடுகளுடன் தொடர்புடைய பல வங்கிக் கணக்குகளுக்கு இடையே கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்ததாக குற்றப்பிரிவு போலீசார் அமலாக்க இயக்குநரகத்திற்கு அறிவித்தனர். பரிவர்த்தனைகளில் ஈடுபட்டவர்கள் நிஜாமுதீன் மார்க்கஸுடன் தொடர்புடையவர்கள் என்றும், மவுலானா சாத் உடன் நெருக்கமானவர்கள் என்றும் கூறி உள்ளது.
Leave your comments here...