உலகப் புகழ்பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் – மத்திய அரசு புவிசார் குறியீடு அங்கீகாரம்

இந்தியாதமிழகம்

உலகப் புகழ்பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் – மத்திய அரசு புவிசார் குறியீடு அங்கீகாரம்

உலகப் புகழ்பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் – மத்திய அரசு புவிசார் குறியீடு அங்கீகாரம்

கோவில்பட்டி என்ற உடன் தமிழகத்தில் பெரும்லானோருக்கு சட்டென்று நினைவில் வருவது கோவில்பட்டி வீரலட்சுமி மற்றும் கோவில்பட்டி கடலை மிட்டாய். கடலை மிட்டாய் என்பது தமிழகத்தில் பரவலாக அணைத்து மாவட்டங்களிலும் கிடைக்கக்கூடியது என்றாலும் கோவில்பட்டி கடலை மிட்டாய் என்றால் அதன் சுவை இன்னும் அதிகம் என்பது நாம் அறிந்ததே.தரமான கடலைகளை தேர்ந்தெடுத்து சுத்தமான முறையில் இந்த கோவில்பட்டி கடலைமிட்டாய் தயார் செய்கிறார்கள்.

இத்தகைய அறிய வகை கோவில்பட்டி கடலை மிட்டாயை அதிக அளவில் உண்பதால் நல்ல உடல் கட்டு வருவதோடு அதிக எடை உள்ளவர்களின் எடை குறையும். அதில் குறிப்பாக MNR மற்றும் VVR என்கிற இரண்டு கடைகளில் தயாரிக்கப்படும் கடலை மிட்டாயில் தான் சுவை மிக அதிகமாக இருக்கும்.இதன் சுவையின் ரகசியம் இந்த கோவில்பட்டி ஊரு மண் வாசனையும், கோவில்பட்டியில் பல வருட அனுபவத்துடன் கடலைமிட்டாய் தயாரிக்கும் உற்பத்தியாளர்களின் கை பக்குவம் தான் கடலை மிட்டாயின் அதிக சுவைக்கு காரணம் என்றே பலர் நம்புகின்றனர்.

ஒரு பொருளின் தனித்தன்மைக்கு அது தயாரிக்கப்படும் ஊரும் காரணமாக இருக்கும் பட்சத்தில் அளிக்கப்படும் சிறப்பு அந்தஸ்துகளில் ஒன்று புவி சார் குறியீடு. உதாரணத்துக்குக் காஞ்சிபுரம் பட்டு, மணப்பாறை முறுக்கு, மதுரை மல்லி,பத்தமடைப் பாய் போன்றவை தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்.

அந்தவரிசையில் தற்போது, சுவைமிகுந்த கோவில்பட்டி நிலக்கடலையைக் கொண்டு, தனித்துவமிக்க செய்முறையில் உருவாக்கப்படும் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு விட்டால், அந்தப்பகுதி அல்லாத மற்ற பகுதிகளில் அந்த ஊரின் பெயரைப் பயன்படுத்தி தயாரிக்க முடியாது. அதாவது, இனி கோவில்பட்டியை தவிர வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் `கோவில் பட்டி கடலை மிட்டாய்’ என்ற பெயரை பயன்படுத்த முடியாது.

மேலும், புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் யாராவது தயாரித்து சந்தைப்படுத்த முயன்றால், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும். 2014ஆம் ஆண்டு முதல் இதற்கான விண்ணப்பம் மீது பரிசீலனை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.


இதனை மாநில செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. மேலும் இந்திய அரசின் புவிசார் குறியீட்டு இதழிலும் ( GOVERNMENT OF INDIA GEOGRAPHICAL INDICATIONS JOURNAL ) வெளியிடப்பட்டுள்ளது.

Leave your comments here...