மருத்துவத்துறையில் எந்த நாடும் செய்யாத புதிய சாதனை படைக்கும் இந்தியா ; 87 நாடுகளுக்கு பல லட்சம் மருந்துகள் ஏற்றுமதி – வல்லரசு ஆகிறதா…?
கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்க இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சியில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையே, மலேரியா காய்ச்சலை குணப்படுத்த உதவும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த உதவுவதாக கண்டறியப்பட்டது. இந்த மாத்திரைகள் இந்தியாவில் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவ தொடங்கியதை தொடர்ந்து, இந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது.
இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை தங்களுக்கு வழங்குமாறு அமெரிக்கா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இந்தியாவை கேட்டுக்கொண்டன. இதனால் ஹைட்ராக்சிகுளோரோகுயின் ஏற்றுமதிக்கு இருந்து வந்த தடையை சமீபத்தில் மத்திய அரசு நீக்கியது. இதைத்தொடர்ந்து, இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அந்த மாத்திரைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தன.இவற்றில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை உலக அளவில் 70 சதவீதம் அளவுக்கு இந்தியாவில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதையடுத்து, அமெரிக்காவில் விஸ்வரூபம் எடுத்துள்ள கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான சிகிச்சைக்காக ஹைட்ராக்சிகுளோகுயின் மாத்திரைகளை தந்து உதவும்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, இந்த மாத்திரைகள் உடனே அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
India has provided 2.8 million HCQ tablets and 1.9 million Paracetamol tablets as part of assistance. India also provided HCQ and Paracetamol tablets on a commercial basis to 87 countries: Ministry of External Affairs pic.twitter.com/4x0x6e3ry6
— ANI (@ANI) April 30, 2020
அமெரிக்கா உள்பட உலகில் மொத்தம் 87 நாடுகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மனிதாபிமான அடிப்படையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் 28 லட்சமும், பாராசிட்டமால் மாத்திரைகள் 19 லட்சமும் வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.இது மட்டுமன்றி, வணிகரீதியாகவும் இந்த மாத்திரைகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது எனவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.தற்போது உலகில் எந்த நாடும் இதுபோல் மாத்திரைகள் ஏற்றுமதி செய்தது இல்லை என கூறப்படுகிறது.!
Leave your comments here...