பிரபாகரன் காட்சி ; உள்நோக்கத்துடன் பயன்படுத்தவில்லை: நடிகர் துல்கர் சல்மான் மன்னிப்பு

சினிமா துளிகள்

பிரபாகரன் காட்சி ; உள்நோக்கத்துடன் பயன்படுத்தவில்லை: நடிகர் துல்கர் சல்மான் மன்னிப்பு

பிரபாகரன் காட்சி ; உள்நோக்கத்துடன் பயன்படுத்தவில்லை: நடிகர் துல்கர் சல்மான் மன்னிப்பு

துல்கர் சல்மான், சுரேஷ் கோபி, கல்யானி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் நடித்து பிப்ரவரி மாதம் வெளியான படம் வரனே அவஸ்யமுன்ட். அந்தப் படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சியில் நாயை பிரபாகரன் என்று அழைக்கும் காட்சி இடம்பெற்றிருக்கும். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இழிவுபடுத்துவது போல இந்தக் காட்சி அமைந்திருப்பதாக துல்கர் சல்மான் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படத்தில் வரும் குறிப்பிட்ட நகைச்சுவை காட்சி, உள் நோக்கத்துடன் வைக்கப்பட்டதல்ல என விளக்கம் அளித்துள்ளார்.


மேலும் கேரளாவில் பிரபாகரன் என்பது ஒரு பொதுவான பெயர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதற்கு எதிர்வினையாற்றும் பலரும் படத்தைப் பார்க்காமலேயே வெறுப்பை பரப்ப முயல்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். தங்கள் மீதான வெறுப்பை ஏற்றுக் கொள்வதாகவும், ஆனால், தன் தந்தையை மம்முட்டியையோ அல்லது மூத்த நடிகர்களையோ இதில் இழுக்க வேண்டாம் எனவும் துல்கர் சல்மான் கேட்டுக் கொண்டுள்ளார். தன்னுடைய வார்த்தைகள் மூலமாகவோ, படங்கள் மூலமாகவோ யாரையும் காயப்படுத்த நினைத்ததில்லை எனவும், இது உண்மையில் தவறான புரிதல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave your comments here...