பஞ்சாயத்து தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் – கொரோனா நம் அன்றாட வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது – பிரதமர் மோடி
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், மருத்துவ வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய வண்ணம் உள்ளார். இந்நிலையில், தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நாடு முழுவதும் உளள கிராம பஞ்சாயத்து அமைப்புகளுடன் பிரதமர் மோடி உரையாடுகிறார். இந்நிலையில், நாட்டில் பஞ்சாயத்து ராஜ் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி நாடு முழுவதுமுள்ள பஞ்சாயத்து ராஜ் தலைவர்களுடன் காலை 11 மணியளவில் உரையாடினார்.
அதற்கு முன், பஞ்சாயத்து ராஜ் தினத்தில் இ-கிராம்சுவராஜ் என்ற வலைதளம் மற்றும் மொபைல் போன் அப்ளிகேசன் ஒன்று பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாடு முழுவதுமுள்ள பஞ்சாயத்து தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே உரையாடினார்.
Interacting with Sarpanchs across the country through Video-Conferencing on Panchayati Raj Divas. https://t.co/irKVx4lKN6
— Narendra Modi (@narendramodi) April 24, 2020
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி:- நாம் சுய சார்புடன் இருக்க வேண்டும் என்ற படிப்பினையை கொரோனா வைரஸ் பாதிப்பு கற்று கொடுத்துள்ளது. நாட்டில் 1.25 லட்சம் பஞ்சாயத்துகளுக்கு பிராண்ட்பேண்ட் சேவை சென்றடைந்துள்ளது.
அதுமட்டுமின்றி, கிராமங்களில் பொது சேவை மையங்களின் எண்ணிக்கையும் 3 லட்சத்திற்கும் மேல் உள்ளது என கூறினார்.கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடுவதற்காக, சமூக இடைவெளி என்ற மந்திரத்தினை இந்தியாவில் உள்ள கிராமங்கள் எளிமையான முறையில் தந்துள்ளன என்றும் அவர் கூறினார்.
Leave your comments here...