ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமியின் கார் மீது 2 மர்ம நபர்கள் தாக்குதல் …!
ரிபப்ளிக் தனியார் செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியரான அர்னாப் கோசுவாமி, காரசாரமான அரசியல் விவாதங்களுக்குப் புகழ் பெற்றவர். இந்த நிலையில் அர்னாப் கோஸ்வாமியும் அவரது மனைவியும் நேற்று இரவு அலுவலக பணிகளை முடித்து விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பைக்கில் வந்த இருவர் திடீரென வழிமறித்து காரை கண்ணாடி பாட்டில்கள், கற்களால் தாக்கினார்கள், இதில் கார் கண்ணாடிகள் உடைந்தன. இந்நிலையில், அர்னாப் கோசுவாமி அடையாளம் தெரியாத குண்டர்களால் தாக்கப்பட்ட விவகாரம் நாடு முழுக்கப் பரவி வருகிறது.
#SoniaGoonsAttackArnab | WATCH: Arnab narrates the physical attack on him by Congress goons https://t.co/ehkpNESnKV pic.twitter.com/uMMaVQVfmy
— Republic (@republic) April 22, 2020
இதுகுறித்து அர்னாப் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், இதற்குக் காரணம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். மேலும் அர்னாப் கோஸ்வாமி, அவரின் மனைவி மீதான தாக்குதல் தொடர்பாக இருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தது காவல்துறை!
#UPDATE 2 people arrested in connection with the attack on Arnab Goswami & his wife. FIR registered by NM Joshi Marg Police station under sec 341 (Punishment for wrongful restraint) and 504 (Intentional insult with intent to provoke breach of the peace) of IPC: DCP Zone 3 #Mumbai https://t.co/zBarBKk4m6
— ANI (@ANI) April 23, 2020
முன்னதாக மும்பையில் சாதுக்கள் அடித்து கொன்ற விவகாரத்தில் விவாதம் நடத்திய அர்னாப் கோசுவாமி மீது மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதியைக் குலைத்தல், மதப் பிரிவினையைத் தூண்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 16ஆம் தேதி 2சாதுக்கள் உட்பட மூன்று பேர் அடித்துக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சோனியா காந்தியை தொடர்புபடுத்தி அவதூறாகப் பேசியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர் மீது பிரிவுகள் 117, 120பி, 153(ஏ), 153(பி), 295(ஏ), 500, 504, 506 ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டி.சி.பி. வினித்தா சாஹு தெரிவித்துள்ளார். மேலும், சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரிலும் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
Leave your comments here...