ஏழை மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கு தனது உண்டியல் சேமிப்பை கொடுத்து உதவிய கேந்திரய வித்யாலயா பள்ளியில் படிக்கும் 4ம் வகுப்பு மாணவி…!!
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பரவி வரும் கொரோனா வைரஸைத் தடுக்கவும் அதன் தாக்கத்திலிருந்து மீளவும் போர்க்கால அடிப்படையில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உதவ அவசர கால குடிமக்களுக்கான உதவி மற்றும் மீட்பு நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதற்கு அனைத்து தரப்பு மக்களும் நிதியுதவி வழங்க பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியரசுத் தலைவர் தொடங்கி அனைத்து தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.
இதே போல, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் நிதியளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து தின்தோறும் பல்வேறு நிறுவனங்கள், பிரபலங்கள்,தன்னார்வலர்கள், பள்ளி குழந்தைகள் என தங்காள் இயன்ற நிதி உதவியை செய்து வருகிறார்கள்.
சிறிய தொகையாக இருந்தாலும் பள்ளி குழந்தைகள் அனுப்பி வைக்கும் நிதிக்கு அரசு அதிகாரிகள், கட்சி தலைவர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திருவண்ணாமலை கேந்திரய வித்யாலயா பள்ளியில் 4வது வகுப்பு படிக்கும் மாணவி கோபிகா.தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று நோயின் அசாதாரண சூழலில் தனது சேமிப்பு பணத்தை ஏழைகளின் உணவிற்கு வழங்க ஆசைப்பட்டார். இதன்படி திருவண்ணாமலை கேந்திரய வித்யாலயா பள்ளியில் 4வது வகுப்பு படிக்கும் மாணவி கோபிகா தனது ஓராண்டு உண்டியல் சேமிப்பை கொரோனா நிவாரன நிதியாக ஏழை மாற்றுத்திறனாளி சுகுணா வீட்டிற்கு மாவட்ட ஆட்சித்தலைவருடன் சென்று வழங்கினார்.இதனை பலரும் பாராட்டி வருகிறார்கள்