தனது ஒரு மாத சம்பளமான 70,603 ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய மதுரை மின்வாரிய ஊழியர்..!
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 2ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் பிரதமர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி (மார்ச் 28) வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, டாடா அறக்கட்டளை மற்றும் டாடா குழுமம் ரூ.1500 கோடி நிதி அளித்து உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் முதல் ஆளாக ரூ.25 கோடி நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதே போல, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் நிதியளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து தமிழகத்தில் ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடியை முதல்வரின் பொது நிவாரண நிதியாக வழங்கியுள்ளது. இதில் நடிகர் அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.டாடா நிறுவனம் தமிழகத்திற்கு கொரோனா தொற்றை கண்டறிய தமிழக அரசுக்கு 40,032 PCR kit கருவிகளை டாடா நிறுவனம் தந்துள்ளது. ரூ.8 கோடி மதிப்புள்ள கருவிகளை தந்ததற்காக டாடா நிறுவனத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
இதன்படி, மதுரையில் மின்வாரிய துறையில் போர்மென் ஆக பணிபுரியும், பாலராமலிங்கம் என்பவர் தன்னுடைய ஒரு மாத சம்பளமான 70 ஆயிரத்து 603 ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார். இந்த தொகையை மின்வாரிய வட்ட செயர்பொறியாளர் வெண்ணிலா அவர்களிடம் பாலராமலிங்கம் வழங்கினார்.
Leave your comments here...